திருமலை, மார்ச் 30- மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக, நாடு முழுவதும் வணிக ரீதியிலான எரிவாயு (Gas) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, திருமலையில் இயங்கி வந்த 50-க்கும் மேற்பட்ட தனியார் ஓட்டல்கள் மற்றும் துரித உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.கோவிலுக்கு நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர். உணவகங்கள் மூடப்பட்டதால் உணவிற்காகப் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஓட்டல்கள் மூடப்பட்டதால் கோவில் கட்டணமில்லாமல் உணவு தரும் மய்யத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித் துள்ளது. இதனால் கோவில் நிர்வாகத் திற்கு புதிய சிக்கல் எழுதுள்ளது.
