டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வாஷிங்மிஷின், பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன்: அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.
* திமுக தேர்தல் அறிக்கை 2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர் ஸ்டார் களமிறங்கி விட்டது. மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட ஆல் ரவுண்டர் நமது தேர்தல் அறிக்கைதான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* குஜராத்தில் பாஜக ஆட்சியில் பழங்குடிகள், தாழ்த்தப் பட்டோர் துன்புறுத்தப்படுகிறார்கள், ராகுல் கண்டனம்.
* அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்காவின் பல மாகாணங்களில் மக்கள் போராட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாடு தேர்தல்: 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் களை அறிவித்தது விசிக; காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார் தொல். திருமாவளவன்
தி இந்து:
* 2027 உ.பி. சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் தொடங்கினார். சமூக நீதிக் காலத்தை மீட்டெடுப்போம் என சபதம்.
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு நிறுத்தமா? பீகார் முதல் ராஜஸ்தான் வரை, ஆயிரக்கணக்கான கிராமப்புறத் தொழிலாளர்கள் தங்களுக்கு பணி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. பழைய திட்டத்தின் கீழ் புதிய பணிகளை தொடங்க வேண்டாம் என தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக சில மாவட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.
தி டெலிகிராப்:
* டில்லி பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: டில்லி பல்கலைக்கழகத்தின் (DU) கீழ் இயங்கும் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் ‘யுவ கும்ப்’ (YUVA KUMBH) என்ற பெயரில் ஒரு நிகழ்வை நடத்தியுள்ளன; இதில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் அழைக்கப்பட்டு, சங்கத்தின் 100 ஆண்டுகால பயணம் குறித்துப் பேச அனுமதிக்கப்பட்டனர்.
– குடந்தை கருணா
