நான் ஒன்றிய அமைச்சராக இருந்த போது கேரளாவிற்காக எதுவுமே செய்யவில்லை பா.ஜ.க. வேட்பாளர் ஒப்புதல் வாக்குமூலம்

1 Min Read

திருவனந்தபுரம், மார்ச் 30- கேரள அரசியலில் எப்போதும் உற்றுநோக்கப்படும் ஒரு ‘நட்சத்திரத் தொகுதி’ நேமம். 2016இல் மூத்த தலைவர் ஓ.ராஜகோபால் மூலம் பா.ஜ.க. தனது முதல் கணக் கைத் தொடங்கிய தொகுதி இது. ஆனால், 2021 தேர்தலில் அத் தொகுதியை பா.ஜ.க. இழந்தது. தற்போது இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க, முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் களம் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராஜீவ் சந்திரசேகர், ஓர் அதிரடியான வாக்குமூலத்தை அளித்தார். அவர் கூறுகையில்: “நான் ஒன்றிய அமைச்சராக இருந்தபோது கேரளாவிற்காக எதையும் செய்ய முடியவில்லை. ஆனால், என்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தால், நேமம் தொகுதிக்காகப் பல புதிய திட்டங்களைக் கொண்டு வருவேன்.” இந்தக் கருத்துக்கு இடதுசாரி கூட்டணி வேட்பாளரும், தற்போதைய அமைச்சருமான வி. சிவன்குட்டி தனது முகநூல் பக்கத்தில் கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். அவரது விமர்சனத்தின் முக்கிய அம்சங்கள்

மக்களை அவமானப்படுத்தும் செயல்

ஒன்றிய அமைச்சராக இருந்தும் கேரளாவிற்கு எதுவும் செய்யவில்லை எனக் கூறுவது மாநில மக்களை அவ மானப்படுத்துவதாகும்  பதவியில் இருந்தபோதே செயல்படாத ஒருவரை வாக்காளர்கள் எப்படி நம்புவார்கள்?

பாஜகவின் நோக்கம்

நாட்டின் வளர்ச்சியை விடத் தங்களது அஜெண்டாவை நிறை வேற்றுவதே பாஜகவின் குறிக்கோள்  பாஜக ஏன் கேரளா மீது இவ்வளவு வெறுப்பைக் காட்டுகிறது எனத் தெரியவில்லை. வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நேமம் தொகுதியில் தற்போது பலப்பரீட்சை தீவிரமடைந்துள்ளது:

கடந்த தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்று வோம் எனக்கூறி, கைவசம் இருந்த ஒரு தொகுதியையும் இழந்த பாஜக, இம்முறை ராஜீவ் சந்திரசேகர் மூலம் மீண்டும் எழுச்சி பெற முயல்கிறது. ஆனால், அமைச்சரின் தற்போதைய விமர்சனம் தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *