பட்டுக்கோட்டையில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு மற்றும் சந்தா வழங்கினர் (28.3.2026)

1 Min Read

பட்டுக்கோட்டை நகர மன்ற தலைவர் சே. சண்முகபிரியா, தி.மு.க. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அசோக் ராணி, விடுதலைச் சிறுத்தைகள், கட்சி கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். கழகத் தோழர்கள் தமிழர் தலைவரிடம் இயக்க இதழ்களுக்கு சந்தா, ‘பெரியார் உலக’ நிதி வழங்கினர்.

திராவிடர் கழகம்

அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி மணி மண்டபத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு அழகிரியின் பேரன் ஆர். அழகிரி சுப்பையா ராஜா (மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணித் தலைவர்) மற்றும் தோழர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். பேராவூரணியில் பல்வேறு கட்சியினர் தமிழர் தலைவரை மல்லிகை சிதம்பரம் இல்லத்தில் சந்தித்தனர்.

திராவிடர் கழகம்

பெரியார் பெருந்தொண்டர் காளிதாசன் இல்லத்தில் மாவட்ட செயலாளர் கா‌.தென்னவனின் தாயார் மறைந்த பேபி படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் வணக்கம் செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்

திராவிடர் கழகம்

பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் வை.சிதம்பரத்தின் சகோதரர் மறைந்த மல்லிகை வை.முத்துராமலிங்கம் படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் வணக்கம் செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *