சென்னை, மார்ச் 30– காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற் சாலைகளில் பணியாற்றும் 12 லட்சம் தொழிலாளர்களுக்கு உணவு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு கேட்டரிங் சர்வீஸ் அசோசியேசன் தெரிவித்துள்ளது.
எரிவாயு உருளை தட்டுப்பாட்டை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
