வி.சி.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு காட்டுமன்னார்கோவிலில் தொல்.திருமாவளவன் போட்டி

1 Min Read

சென்னை, மார்ச் 30- 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று (29.3.2026) அறிவித்தார்.

கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இம்முறை தேர்தல் களத்தில் நேரடியாகப் போட்டியிடுகிறார்.

காட்டுமன்னார் கோவில் தொல்.திருமாவளவன், செய்யூர் சிந்தனைச் செல்வன், திண்டிவனம் வன்னியரசு, அரக்கோணம் எழில் கரோலின், திருப்போரூர் பன்னீர்தாஸ், பண்ருட்டி அப்துல் ரகுமான், கள்ளக்குறிச்சி மாலதி, பெரியகுளம் சக்திவேல்.

திமுக கூட்டணியில் விசிக-வுக்கு மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் பட்டியலில் ஒரு பெண் வேட்பாளர் (மாலதி – கள்ளக்குறிச்சி) மற்றும் சிறுபான்மையின பிரதிநிதியாக அப்துல் ரகுமான் (பண்ருட்டி) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *