சென்னை, மார்ச் 30- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளிடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து, வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகள் மொத்தம் 46 தொகுதிகளில் அதிமுகவை நேரடியாக எதிர்த்துப் போட்டியிடுகின்றன.
இரு கூட்டணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், நட்சத்திரத் தொகுதிகள் மற்றும் முக்கியத் தொகுதிகளில் நேரடி மோதல் உறுதியாகியுள்ளது.
நேரடிப் போட்டி நிலவும்
முக்கியத் தொகுதிகள்:
கன்னியாகுமரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி, கோவில்பட்டி, தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, போடி, ஆண்டிப்பட்டி, திருமங்கலம், மதுரை வடக்கு, திருச்சி கிழக்கு, சிறீரங்கம், கரூர், எடப்பாடி, ஓசூர், வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம், அண்ணா நகர் உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரதானக் கட்சிகள் மோதுகின்றன.
திமுக கூட்டணி கட்சிகள் – அதிமுக மோதும் இடங்கள்
அதிமுகவை நேரடியாக எதிர்கொள்ளும் திமுக கூட்டணிக் கட்சிகளின் விவரம் பின்வருமாறு: காங்கிரஸ் (18 தொகுதிகள்): பொன்னேரி (தனி), சிறீபெரும்புதூர் (தனி), ஊத்தங்கரை (தனி), கிருஷ்ணகிரி, ஆத்தூர் (தனி), ஈரோடு கிழக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், துறையூர் (தனி), கடலூர், மேலூர், உசிலம்பட்டி, திருவாடானை, சிறீவைகுண்டம், சங்கரன்கோவில் (தனி), அம்பாசமுத்திரம், சிவகாசி மற்றும் வேளச்சேரி.
தேமுதிக (5 தொகுதிகள்): திருத்தணி, குடியாத்தம் (தனி), ஓமலூர், விருதுநகர், மயிலம்.
விடுதலைச் சிறுத்தைகள் (5 தொகுதிகள்): செய்யூர் (தனி), அரக்கோணம் (தனி), திண்டிவனம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி), பண்ருட்டி.
இந்திய கம்யூனிஸ்ட் (4 தொகுதிகள்): திருப்பூர் வடக்கு, பவானிசாகர் (தனி), திருத்துறைப்பூண்டி (தனி), சிறீவில்லிபுத்தூர் (தனி)மார்க்சிஸ்ட்.
கம்யூனிஸ்ட் (2 தொகுதிகள்): திருவொற்றியூர், பழனி.
மதிமுக (2 தொகுதிகள்): சீர்காழி, கடையநல்லூர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2 தொகுதிகள்): வாணியம்பாடி, பாபநாசம்.
கொமதேக (2 தொகுதிகள்): திருச்செங்கோடு, பொள்ளாச்சி.
மனிதநேய மக்கள் கட்சி (2 தொகுதிகள்): மணப்பாறை, நாகை.
முக்குலத்தோர் புலிப்படை: சிவகங்கை.
தமிழர் தேசம் கட்சி: நத்தம்.இந்த நேரடிப் போட்டி நிலவும் தொகுதிகள் தேர்தல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
