சென்னை மாநிலத்தில் 1952இல் காங்கிரஸ் தோல்வியடைந்தது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அய்க்கிய முன்னணி உருவானது. ஆனால், ஒற்றுமையின்மையால் அதிலிருந்த சில கட்சிகளைக் காங்கிரஸ் தன் பக்கம் இழுத்தது. ஆளுநரின் சட்ட மேலவை நியமன உறுப்பினராக இராஜகோபாலாச்சாரியார் சட்டமன்றத்தில் நுழைந்து காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தார். 11.4.1952 ஆண்டு ஆச்சரியார் முதலமைச்சரானார்.
ஆட்சிக்கு வந்தும் ஆச்சாரியார் 6000 அரசுப்பள்ளிகளை உடனே மூடினார். மீதிப் பள்ளிகளில் அரைநாள் படிப்பு – அரை நாள் ஜாதித்தொழில் என்று ஆணையிட்டார்.
இத்திட்டத்திற்கு ‘‘New Education Policy in Elementary Education” (தொடக்கக்கல்வியில் புதிய கல்வி கொள்கை) என்ற பெயரில் ஜாதித்தொழிலை மய்யப்படுத்தியும், படிக்கும் நேரத்தை குறைத்தும் பார்ப்பனரல்லாதார் கல்வி உரிமையைப் பறித்திடும் சூழ்ச்சியைத் தந்தை பெரியார் ஒருவரே அறிந்தார். இத்திட்டத்திற்குக் ‘குலக்கல்வித் திட்டம்’ என்று பெயரிட்டு, நாடு தழுவிய அளவில் எதிர்ப்பலைகளை உருவாக்கினார்.
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து நீடாமங்கலம் அ. ஆறுமுகம் அவர்கள் தலைமையில் குலக்கல்வி எதிர்ப்பு படை நாகப்பட்டிணத்தில் தொடங்கி சென்னை நோக்கி புறப்பட்டது.
குலக்கல்வி திட்ட எதிர்ப்புப் படை சென்னையை அடையும் முன்பே உடல் நலமில்லை என்று கூறி 30.3.1954இல் இராஜகோபாலாச்சாரியார் தனது பதவி யிலிருந்து விலகினார்.
சென்னை கடற்கரையில் குலக்கல்வித் திட்டத்தை வரவேற்று மிகப் பெரிய அளவில் கூட்டம் நடைபெற்றது.
14.4.1954இல் முதலமைச்சராக பொறுப் பேற்றார். 18.4.1954இல் குலக்கல்வித் திட்ட உத்தரவை திரும்பப்பெற்று குலக்கல்வி ஒழிந்தது.
