சென்னை, மார்ச் 29– எல்.பி.ஜி. எனப்படும் திரவநிலை பெட்ரோலிய எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி யான சூழலால், வணிக மற்றும் தொழில் துறை எல்.பி.ஜி. ஒதுக்கீட்டை முதலில் 20 சதவீத அளவுக்கு ஒன்றிய அரசு குறைத்தது.
தற்போது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50 சதவீதமாக உயா்த்தியுள்ளது. இதில் எல்.பி.ஜி., ஒதுக்கீடு பெற, அனைத்து வணிக மற்றும் தொழில் துறை, எல்.பி.ஜி. நுகா்வோா் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதன்படி சென்னை, திருவள்ளூா், நாகை மாவட்டங்கள், டோரண்ட் எரிவாயு விநி யோக நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளலாம் (கட்டணமில்லா தொடா்பு எண்: 1800 2125 6789),
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், வேலூர், ராணிப்பேட்டை திருப்பத் தூர் மாவட்டங்கள், ஏ.ஜி.அண்டு பி. திங்க் எரிவாயு விநியோக நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளலாம் (கட்டணமில்லா தொடா்பு எண்:1800 202 2999),
திருப்பூா், கடலூா், திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்கள் அதானி டோட்டல் எரிவாயு விநியோக நிறுவனத்தை தொடா்பு கொள்ளலாம் (கட்டணமில்லா தொடா்பு எண்: 079-4754 5252).
கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, விருதுநகா், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், இந்தியன் ஆயில் விநி யோக நிறுவனத்தை தொடா்பு கொள்ளலாம் (கட்டணமில்லா தொடா்பு எண்:1800 180 7788),
திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, சிவ கங்கை, தஞ்சை, திண்டுக் கல், கரூா் மாவட்டங்கள் மெகா என்ஜினியரிங் விநியோக நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளலாம் (கட்டணமில்லா தொடா்பு எண்:1800 123 1803),
திருச்சி, நாமக்கல் மாவட்டங்கள் அய்.ஆா்.எம். எனா்ஜி விநியோக நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளலாம் (கட்டணமில்லா தொடா்பு எண்:1800 891 1310).
ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் பாரத் பெட்ரோலிய நிறு வனத்தைத் தொடா்பு கொள்ளலாம் (கட்டண மில்லா தொடா்பு எண்: 1800 22 4344).
