கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 29.3.2026

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தி.மு.க.வில் போட்டியிடும் 164 வேட்பாளர்களும் அறிவிப்பு: கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டி; சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின்.

* திமுக வேட்பாளர்கள் பட்டியலில் 60 புதுமுகங்கள். “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துள்ளோம்” மு.க.ஸ்டாலின் பஞ்ச் டயலாக்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மகளிர் இட ஒதுக்கீடு சட்ட அமலாக்கம் தொடர்பாக ஒன்றிய மற்றும் எதிர்க் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு. நாடாளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் 2023 ஆம் ஆண்டு சட்டத்தில் அரசு திருத்தங்களை அறிமுகப்படுத்தக் கூடும் என்ற யூகங்கள் பரவலாக உள்ளன.

* கருநாடகாவிலும் இருமொழிக் கொள்கை: கருநாடகாவில் இருமொழிக் கொள்கைக்கு கல்வியாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர். மாநிலக் கல்வி வரைவுக் கொள்கையானது, தாய்மொழியான கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை மய்யமாக கொண்ட இரு மொழிக் கொள்கையை அமல்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது. தமிழ்நாட்டில் 1967இல் அறிஞர் அண்ணா அறிமுகப்படுத்திய இருமொழிக் கொள்கை, 60 ஆண்டுகளுக்குப் பிறகு கருநாடகாவிலும் எதிரொலிக்கிறது.

தி டெலிகிராப்:

* தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் நிலவும் குறைபாடு உள்ள ஆசிரியர்-மாணவர் விகிதங்கள், கல்வியின் தரத்தைத் தொடர்ந்து பாதித்து வருவ தாகவும்; இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கத்தை (DEMOGRAPHIC DIVIDEND) பொருளாதார நன்மையாக மாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இது ஒரு சவாலாக அமைவதாகவும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை கண்டறிந்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘ஒரு தொழிலதிபர் ஏன் உடனிருந்தார்?’: டிரம்ப்புடனான தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க் உடனிருந்தது குறித்து பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கேள்வி. ஒன்றிய அரசு இதை மறுத்துள்ளது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *