பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) பெரியார் கலைவிழா – 2026

1 Min Read

வல்லம், மார்ச் 29- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) பெரியார் கலை விழா நேற்று (28.3.2026) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாணவர் அமைப்பின் ஆலோசகர் வரலெட்சுமி வரவேற்புரை வழங்கினார்.

பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேரா முனைவர் ஆர்.மல்லிகா தலைமையுரையாற்றி னார். அவர் உரையாற்றும்போது மாணவர்கள் கல்வி மற்றும் அனைத்து துறைகளிலும் பங்கு பெற்று சிறந்துவிளங்க வேண்டு மென்று கூறினார்.

நிகழ்வின் முக்கிய சிறப்பு அம்சமாக, சமூக ஆர்வலரும், இயக்குநருமான பி.எஸ்.மித்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில் மாணவர்களிடம் சமுக வளர்ச்சிக்கு படைப்பாற்றல் முயற்சிகளுக்கும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாணவர்கள் கேட்கும் வினாக்களுக்கு எளிமையான புரிந்துகொள்வதற்கேற்றார் போல் பதிலினை அளித்தார்.

மேலும் கலை விழா போட்டி யில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசினை அளித்து பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார். சிறந்த பாடகர் அருணா ரவிந்திரன் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்.

இதனை தொடர்ந்து பல்கலைக் கழக பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா உரையாற்றும் போது மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலைவிழாவாக பெரியார் விழா இருக்கின்றது என்று கூறி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை கூறினார்.

இறுதியாக நன்றியுரையை மாண வர் தலைவர் கவுசிக் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *