டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் தேர்வு விடைகள் வெளியீடு!

1 Min Read

சென்னை, மார்ச் 29-  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

சான்றிதழ் குறைபாடுகளை சரிசெய்ய கடைசி வாய்ப்பு:

2025 மே 21 அன்று அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் சில தேர்வர்களின் சான்றிதழ்களில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறைபாடுகள் உள்ள தேர்வர்கள் நேற்று (28.3.2026) முதல் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 11:59 மணிக்குள் விடுபட்ட அல்லது சரியான ஆவணங்களை மீண்டும் பதிவேற்றலாம்.

எப்படி செய்வது?

தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘ஒருமுறை பதிவு’ (OTR) கணக்கின் வாயிலாக ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான அறிவிப்பு சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என செயலாளர் பானோத் மருகேந்தர் லால் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு – II:

உத்தேச விடைகள் வெளியீடு: கடந்த மார்ச் 7 மற்றும் 8 (2026) ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு – II (நேர்முகத் தேர்வு பதவிகள்) க்கான உத்தேச விடைகள் (Tentative Answer Keys) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பாடப்பிரிவுகள்: தமிழ் தகுதித் தேர்வு, பொதுப் பாடங்கள், வேளாண்மை, சட்டம், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கான விடைகள் வெளியிடப் பட்டுள்ளன.

விடைகளில் ஏதேனும் சந்தேகம் அல்லது ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் ஏப்ரல் 3ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் இணையதளம் மூலம் முறையிடலாம்.

தேர்வாணைய இணையதளத்தில் உள்ள “Answer key Challenge” என்ற விண்டோ மூலம் மட்டுமே முறையீடு செய்ய வேண்டும்.

அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் கோரிக்கைகள் கண்டிப் பாக ஏற்கப்படமாட்டாது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *