தமிழ்நாட்டில் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!

2 Min Read

சென்னை, மார்ச் 29- தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் 4ஆம் தேதி திறக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.

பிளஸ் 1 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6ஆம் தேதி முடிகிறது. இதைத் தொடர்ந்து ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு, இறுதி தேர்வுகள் நடைபெறவுள்ளன.

ஒன்று முதல் 5 வகுப்பு வரை ஏப்.6 முதல் 16ஆம் தேதி வரையிலும், 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.1 முதல் 16ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.

இதையடுத்து 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஏப். 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

எனினும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போக வாய்ப்பு இரு்ப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஏப்.23ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறை விடப்படுகிறது.

பள்ளிகள், வாக்குச் சாவடி மய்யங்களாக மாற்றப்படுவதால் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது தேர்தல் பணிகள் நடைபெற இருப்பதால் பள்ளி மாண வர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்படுகிறது. பள்ளி மாணவர் களுக்கு இந்த கல்வி ஆண்டில் 48 நாட்கள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

வினாத்தாள் பதிவிறக்கம்

இதனிடையே வினாத்தாள் பதிவிறக்கம் குறித்த வழிகாட்டுதலை மாவட்டக் கல்வி அலு வலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வுகள் (முழு ஆண்டுத் தேர்வு) ஏப்.1 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதற்கான கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டு, தேர்வு நடத்துவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேர்வுக்கான வினாத்தாள்களை பள்ளிகள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன.

அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களின் பயிற்றுமொழி மற்றும் பாடவாரியாக வினாத்தாள்களை உரிய எண்ணிக்கையில் நகலெடுத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்க வேண்டும். வினாத்தாளை எமிஸ் தளத்தில் மார்ச் 30ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *