டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* உயர் நீதிமன்ற நீதிபதிகளில் பெண்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் இருக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தல் கடிதம்.
* மகாராட்டிராவில் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைதான சாமியார் அசோக் காரத்தை தொடர்ந்து தற்போது பால்கார் பகுதியில் ரிஷிகேஷ் வைத்யா என்ற சாமியாரும் இதே போன்ற குற்றச்சாட்டில் கைது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாட்டில் நிலவும் எல்பிஜி நெருக்கடிக்கு, ஒன்றிய அரசின் ‘நிர்வாகத் திறமையின்மையும் செயலற்ற தன்மையுமே’ காரணம் என்று காங்கிரஸ் உறுப்பினர் விஜயகுமார் நாடாளுமன்றத்தில் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் மாஜி உயர்நீதிமன்ற நீதிபதி பெயர் நீக்கம்: குடும்பத்துக்கு ஓட்டு இருக்கு… மேற்கு வங்கத்தில் நடந்த எஸ்அய்ஆர் பணியில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சாகிதுல்லா முன்ஷி (68) என்பவரின் பெயர் வங்காள வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டதை தொடர்ந்து, தீர்ப்பாயத்தை நாடவுள்ளார்
* ஜார்க்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில், ராம நவமி ஊர்வலத்தின்போது மதக் கொடிகளை ஏற்றுவது மற்றும் பட்டாசுகளை வெடிப்பது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பத்தொன்பது பேர் கைது.
தி இந்து:
* தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தீர்மான அறிவிப்பு இன்னும் ஏற்கப்படவில்லை: இந்தத் தவறு, அரசாங்கத்திற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே நிலவும் ஒரு ‘மறைமுகமான புரிதலைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரெக் ஓ’பிரையன் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களில் 27 சதவீதம் பேர் சேர்க்கைக் கட்டணம், கல்விக் கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் மேம்பாட்டுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருவதாக ஓர் அதிகாரப்பூர்வ ஆய்வின் முடிவை சுட்டிக்காட்டியுள்ள ஒய்.எஸ்.ஆர். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். நிரஞ்சன், அனைவருக்கும் இலவசக் கல்வியை உறுதி செய்ய ஒன்றிய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
– குடந்தை கருணா
