அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவு நாள் கடலூரில் எழுச்சியுடன் நடைபெற்ற பரப்புரை கூட்டம்!

கடலூர், மார்ச் 28  மாவட்டக் கழகம் சார்பில், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி 77 ஆவது நினைவு நாள் பரப்புரைக் கூட்டம் இன்று (28.3.2026) காலை 10 மணி முதல் ஒரு மணி வரை கடலூரில் மாவட்ட கழகத் தலைவர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.

மாநகரக் கழகத் தலைவர் சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் மணிவேல், மாவட்டச் செயலாளர் எழில் ஏந்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், பெரியார் வீர விளையாட்டு கழகத் தலைவர் மாணிக்கவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமநாதன், மாவட்ட மகளிரணி தலைவர் முனியம்மாள், ஒன்றியச் செயலாளர் தர்மன், மாநகர செயலாளர் சின்னதுரை, குறிஞ்சிப்பாடி நகரத் தலைவர் கனகராஜ், ஒன்றிய தலைவர் கனகராஜ், வடலூர் நகர அமைப்பாளர் முருகன், தீன மோகன், ராயர் நூலகர் கண்ணன், சுந்தரமூர்த்தி, கவிஞர் விடுதலை, பாஸ்கர், தங்கத்தமிழன், ராஜ்குமார், கழக அமைப்பாளர் தர்மலிங்கம், ‘மக்கள் அதிகாரம்’ நகர செயலாளர் ரவி, வீர சுந்தரம் ஆகியோர் உரையாற்றிய பின், கழகச் சொற்பொழிவாளர் புலவர் ராவணன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

அஞ்சா நெஞ்சனின் வீர வாழ்வு, லட்சியத் தொண்டு, சுயமரியாதை இயக்கத்தின் அரும்பணி, தந்தை பெரியாரின் தகைசால் மானுட தொண்டு, தமிழர் தலைவர் ஆசிரியரின் அயராப் பணி மற்றும் போராட்ட வாழ்வு பற்றிய விளக்கங்களை சிறப்பாக எடுத்துரைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *