நடிகர் விஜய்க்கு நெருக்கடி! கரூர் துயரம் குறித்து பன்னாட்டு விசாரணை தேவை! அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் கோரிக்கை!

2 Min Read

கரூர், மார்ச் 28- கரூர் வேலுசாமி புரத்தில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பன்னாட்டு விசாரணை தேவை என அய்நா மனித உரிமை ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காவல்துறை மற்றும் தவெக தரப்பின் குற்றச்சாட்டுகளால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே கூட்டநெரிசலுக்கு காரணம் என காவல்துறை தரப்பிலும், காவல் துறை முழுமையான பாதுகாப்பை வழங்க வில்லை, காவல்துறையின் அறிவுறுத்தல் படியே நாங்கள் செயல்பட்டோம் என்று தவெக தரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

தவெக விஜய் பரப்புரை பேருந்து

இந்த துயரச் சம்பவம் தொடர்பாக, தவெக சார்பில் சிபிஅய் விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நேர்மையான மற்றும் உண்மையான வழக்கு விசாரணையை உறுதிப்படுத்த விரும்புகிறோம் என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிபிஅய் விசாரிக்க உத்தரவிட்டும், அதனை கண் காணிக்க 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்க்குழுவை நியமித்தும் உத்தரவு பிறப்பித்தனர். இந்தச் சூழலில் இவ்விவகாரம் குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டும் என அய்நா மனித உரிமை ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அய்நா மனித
உரிமை ஆணையத்தில் கோரிக்கை…

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் நிகழ்வில், கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரூர் துயரச் சம்பவம்

ஜெனிவாவில் நடைபெற்ற அய்.நா. மனித உரிமைகள்ஆணையக் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்ட சமூக மேம்பாடு மற்றும் சமூக வலுவூட்டலுக்கான சங்கத்தைச் சேர்ந்த ரமேஷ் கோவிந்தசாமி, கரூர் நிகழ்வில் அடிப்படை மனித உரிமை கூட மீறப்பட்டதாகக் குறிப்பிட்டார். இந்தவிபத்து நேரிடக் காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் நிர்வாகத் தவறுகளையும் எடுத்துக்காட்டி பன்னாட்டு விசாரணை வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *