பிஜேபிக்குள் குழப்பம்! பழனி தொகுதி பிஜேபிக்கு ஒதுக்காததால் உட்கட்சிப் பிரச்சினை வெடித்தது! பிஜேபியினர் சாலை மறியல்!

பழனி, மார்ச்.28- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா கட்சி 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு தொகுதியும் இடம்பெற வில்லை. இந்த நிலையில் நேற்று (27.3.2026) காலை பழனியை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் இடும்பன்கோவில் சாலை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பழனி தொகுதியை பா.ஜனதா கட்சிக்கு ஒதுக்கக்கோரி முழக்கங்கள் எழுப்பினர். பின்பு சாலையில் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பா.ஜனதா இளைஞரணி நிர்வாகி சதீஷ் என்பவர் கட்சி அலுவலக கட்டடத்தின் மீது ஏறினார். கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் சதீசை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர். இதுகுறித்து பா.ஜனதா கட்சியினர் கூறுகையில், “பா. ஜனதா போட்டியிட உள்ள தொகுதிகள் பட்டியலில் பழனி தொகுதி இடம்பெறவில்லை. எனவே கட்சி மேலிடம் கூட்டணி கட்சி தலைமையிடம் பேசி பழ னியை பா.ஜனதாவுக்கு பெற வேண்டும்” என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *