சமூக வலைதளங்களில் ராம நவமி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதில் இளைஞர் ஒருவர் கையில் ஏந்தியிருக்கும் ஆயுதம், இந்திய ராணுவமே அரிதாகப் பயன்படுத்தும் ‘F89 Auot Mini’ (M249 SAW ரகம்) போன்ற நவீனத் துப்பாக்கியைப் போல காட்சியளிப்பதே இந்த அச்சத்திற்குப் பின்னணியாக உள்ளது.
காஷ்மீர் போன்ற பகுதிகளில் பயங்கரவாதிகளால் ரகசியமாகப் பயன்படுத்தப்படும் அத்தகைய போர்முனை ஆயுதங்களை, பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பொது ஊர்வலத்தில் வெளிப்படையாகக் கொண்டு வருகிறார்கள்
முன்பெல்லாம் கலாச்சார விழாக்களில் கத்தி, வாள், கம்பு போன்ற பாரம்பரிய ஆயுதங்கள் அடையாளமாகத் தூக்கிச் செல்லப்பட்டன. ஆனால், தற்போது, இளைஞர்கள் நவீன ரகத் துப்பாக்கிகளை ஏந்தி வருவது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி வருகிறது.
