அண்மைக் காலமாக குரங்கு போன்று, பாம்பு போன்று, நாய் போன்று எல்லாம் நடித்து அருள் வாக்குச் சொல்லும் சாமியார்கள் வட இந்தியாவில் பெருகிகொண்டே வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது குஜராத் மாநிலத்தில் ஒரு வினோத சாமியார்.
முற்றிலும் மாறுபட்டவர். இவர் அருள் வந்து வாக்கு சொல்லத் தொடங்கும் போது, மிகுந்த ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார். அதன் உச்சகட்டமாக, தான் அணிந்திருக்கும் சட்டையைத் தானே கிழித்துக்கொண்டு சத்தமிட்டு அருள் வாக்கு சொல்லுகிறார்
இவர் கிழிப்பதற்கு ஏதுவாகவே, எளிதில் கிழியக்கூடிய மட்ட ரக கதர் துணியால் தைக்கப்பட்ட குர்தாக்களைப் பயன்படுத்துகிறாராம்.
தினசரி கையிருப்பு: ஒரு நாளைக்கு பலமுறை இப்படிச் செய்ய வேண்டியிருப்பதால், உதவியாளர்கள் குறைந்தது 12 சட்டைகளை எப்போதும் கைவசம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சாமியார் சட்டையைக் கிழிப்பது அவரது உடலுக்குள் இறங்கிய சக்தியின் தீவிரத்தைக் காட்டுவதாக அங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள்.
இன்றைய டிஜிட்டல் உலகில், இதுபோன்ற வினோதமான வழிபாட்டு முறைகள் உடனுக்குடன் வைரலாகி விடுகின்றன. “இது உண்மையான பக்தியா அல்லது கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு யுக்தியா?” என்ற விவாதங்களும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கின்றன.
