மதவெறியை வீழ்த்திய வாரணாசி மக்கள்! ‘இந்து’ என்ற சொல் ‘அன்பு’ என மாறியது!

1 Min Read

மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான வாரணாசியில், கங்கை நதிக்கரையில் நோன்பு திறந்த இஸ்லாமிய மீனவர்கள் கங்கையை அசுத்தப்படுத்திவிட்டதாகக் கூறி, உள்ளூர் பா.ஜ.க. நகர்மன்ற உறுப்பினர் ஒரு புகாரை அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் உத்தரப்பிரதேச காவல்துறை அந்த மீனவர்களைக் கைது செய்து, அவர்களுக்கு 11 நாள் சிறைத்தண்டனை விதித்தது. இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி வாரணாசியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அங்குள்ள சுவர்களில் “ஹர் கர் ஹிந்து” (‘ஒவ்வொரு வீட்டிலும் இந்து’) போன்ற வாசகங்கள் பரவலாக எழுதப்பட்டிருந்தன. ஆனால், இஸ்லாமியர்கள் மீதான இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்குப் பிறகு, வாரணாசி மக்கள் ஒரு வித்தியாசமான போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர்.

ஞாயிறு மலர்

தண்டனைக்கும் வெறுப்பு அரசியலுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தாமல், மக்கள் தூரிகையை ஏந்தியுள்ளனர். சுவர்களில் இருந்த “ஹிந்து” என்ற சொல்லை அழித்துவிட்டு, அதற்குப் பதிலாக “பியார்” (‘அன்பு’) என்ற சொல்லை எழுதியுள்ளனர்.

சுவர்களில் எழுதப்பட்டிருந்த பழைய வாசகங்கள் தற்போது பின்வருமாறு மாற்றப்பட்டுள்ளன:

வீட்டுக்கு வீடு அன்பு: மத அடையாளங்களுக்குப் பதில் அன்பை முன்னிறுத்தியுள்ளனர்

“அன்பால் நிறைந்த தேசம்: பிரிவினையைத் தடுத்து ஒற்றுமையைப் பேணுவோம்!”

வீட்டுக்கு வீடு சகோதரத்துவம்: “மதங்களைக் கடந்து மனித நேயத்தை வளர்ப்போம்” என்று எழுதப்பட்டுள்ளது. வாரணாசியில் இஸ்லாமியர்கள் மிகவும் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்கள் மீதும் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. இந்த நிலையில் வாரணாசியில் பல்வேறு கண்காணிப்பு காமிராவிற்கு முன்பே வாரணாசியின் ஒற்றுமையான முகத்தைப் பார்க்கும் விதமாக அப்பகுதி பெரும்பான்மை ஹிந்துக்களே இதை எழுதி உள்ளனர்

இந்த மாற்றம் ‘வெறுப்பு அரசியலுக்கு’ எதிரான வாரணாசி மக்களின் அமைதியான, ஆனால் வலிமையான எதிர்ப்பாகப் பார்க்கப்படுகிறது. ‘கங்கை நதி அனைவருக்கும் பொதுவானது’ என்பதையும், ‘அன்பு மட்டுமே தேசத்தை ஒன்றிணைக்கும்’ என்பதையும் இந்தச் செயல் உலகிற்கு உரக்கச் சொல்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *