நூலகத் துறையில் நூல் கொள்முதலில் புதிய புரட்சி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 Min Read

சென்னை, மார்ச் 27  தமிழ்நாடு பொது நூலகத் துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த நூல் கொள்முதல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய நடைமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஊழலற்ற முறையில், வாசகர்களுக்குத் தேவையான தரமான நூல்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

முறைகேடுகளுக்கு முற்றுப் புள்ளி

தமிழ்நாட்டில் மாநில நூலகம் முதல் ஊர்ப்புற நூலகங்கள் வரை மொத்தம் 4,500-க்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கான புத்தகங்கள், மக்களின் சொத்து வரியில் ஒரு பகுதியான 10 சதவீத நூலக வரி மற்றும் ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளையின் மானியம் ஆகியவற்றைக் கொண்டு வாங்கப்படுகின்றன.கடந்த காலங்களில், நூல் தேர்வுக் குழுவின் முடிவுகள் ரகசியமாக வைக்கப்பட்டதாகவும், “கமிஷன்” அடிப்படையில் சில பதிப்பகங்கள் மட்டுமே பயன்பெறுவ தாகவும் புகார்கள் எழுந்தன. தரமான புத்தகங்கள் நிராகரிக்கப்பட்டு, பழைய பதிப்புகள் வாங்கப்படுவதாக முன்னணி பதிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த முறைகேடுகளைக் களைய, 2023-2024 கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி: தலைசிறந்த இணையதளம்: நூல் கொள்முதலுக்காக bookprocurement.tamilnadupubliclibraries.org என்ற தளம் உருவாக்கப்பட்டது.

நேரடித் தேர்வு: விண்ணப்பித்த 414 பதிப்பகங்களின் நூல்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, இணைய வழியிலேயே விலை குறைப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

வாசகர் பங்கேற்பு: இறுதிப் பட்டியலில் இருந்து அந்தந்த நூலக வாசகர் வட்ட உறுப்பினர்களே தங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தேர்வு செய்யும் உரிமை வழங்கப்பட்டது.

தற்போதைய கொள்முதல் விவ ரங்கள் கடந்த 2025 மே 15-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆணையின் படி, தற்போது மிகப்பெரிய அளவில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட் டுள்ளன. ரூ40 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு 3873  நூலகங்களில்  22,17,379 பிரதிகள் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் சென்னையில் உள்ள கிடங்குகளில் சேகரிக்கப்பட்டு, தற்போது மாவட்ட வாரியாக உள்ள நூலகங்களுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த வெளிப்படையான கொள்முதல் முறை மூலம் தரமற்ற புத்தகங்கள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.

இதனால்:

போட்டித் தேர்வு மாணவர்கள்: தரமான குறிப்புதவி நூல்கள் கிடைப்ப தால் பயனடைவர்.

பள்ளி/கல்லூரி மாணவர்கள்: தற்காலத்திற்குத் தேவையான அறிவுசார் நூல்களைப் பெறலாம்.

பொது வாசகர்கள்: இலக்கியம் மற்றும் பொது அறிவு சார்ந்த சிறந்த படைப் புகளைத் தங்கு தடையின்றி வாசிக்க முடியும்.

திமுக அரசின் இந்த வெளிப் படையான நடவடிக்கை வாசகர்கள் மற்றும் பதிப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *