காந்திநகர், மார்ச் 27 குஜராத் மாநிலத்தில் காவல்துறையினரால் பல்வேறு சோதனைகளில் கைப்பற் றப்பட்ட சுமார் 2,332 கிலோ போதைப்பொருள் காணாமல் போன தலைமை தணிக்கை அதிகாரி (சிஏஜி) தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய தணிக்கைக் குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி, 2010 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் குஜராத் காவல்துறையினரால் மொத்தம் 6,510 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4,177 கிலோ மட்டுமே முறைப் படி அழிக்கப்பட்டுள்ளன. காணாமல்போனவை: மீதமுள்ள 2,332 கிலோ போதைப்பொருட்கள் எங்கே போனது என்ற விவரம் இல்லை. காணாமல் போன இந்த போதைப்பொருட்களின் பன்னாட்டு சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
எலிகள் தின்றுவிட்டதாம்
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் காணாமல் போனது குறித்து தணிக்கைக் குழு கேள்வி எழுப்பியபோது, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து விசித்திரமான பதில்கள் வந்துள்ளன. சில போதைப்பொருட்கள் திருடு போய் விட்டதாகவும், கணிச மான பகுதியை எலிகள் சாப்பிட்டுவிட்டதாகவும் காவல்துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதிலும், அவற்றை முறையாக அழிப்பதிலும் குஜராத் காவல்துறை பெரும் தோல்வி அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். “எலிகள் போதைப்பொருளைச் சாப்பிட்டன” என்ற விளக்கம் நகைப்புக்குரியதாகவும், உண்மையை மறைக்கும் செயலாகவும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. வெளிநாட்டில் இருந்து வரும் பெரும்பாலான ஆபத்தான போதை மருந்துகள் குஜராத்தில் உள்ள அதானி துறைமுகம் வழியாக வருகிறது. அப்படி பிடிபடும் போதைப்பொருளும் காணாமல் போகிறது.
ஆனால் என்.டி.ஏ. கூட்டணி கட்சியில் உள்ள அன்புமணி போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகம் புழங்குகிறது என்று மேடைக்கு மேடை பாஜக தலைவர்களை அருகில் வைத்துகொண்டே பேசி வருகின்றனர்
குஜராத் மாநிலத்தில் காவல்துறையினரால் பல்வேறு சோதனைகளில் கைப்பற் றப்பட்ட சுமார் 2,332 கிலோ போதைப்பொருள் காணாமல் போன தலைமை தணிக்கை அதிகாரி (சிஏஜி) தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.