எக்ஸ்ரேவைக் கண்டுபிடித்த
வில்ெஹல்ம் கான்ராட் ரான்ட்ஜன் பிறந்த நாள் (27.3.1845)
ரான்ட்ஜன் மார்ச் 27, 1845 அன்று ஜெர்மனியின் லென்னப் (Lennep) நகரில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த ஜெர்மானிய இயற்பியலாளர். நவம்பர் 8, 1895-இல், இவர் தற்செயலாக எக்ஸ்-கதிர்களை (X-rays) கண்டுபிடித்தார். மின்காந்த கதிர்வீச்சு மூலம் உடலின் உட்பகுதி களைப் படம் பிடிக்க முடியும் என்பதை இவர் உலகிற்கு நிரூபித்தார்.
இவரது முதல் எக்ஸ்-கதிர் சோதனை அவரது மனைவியின் கையைப் படம் பிடித்தது ஆகும். இவரது இந்த புரட்சிகரமான கண்டு
பிடிப்புக்காக, 1901-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இவரை கவுரவிக்கும் விதமாக, வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள 111-ஆவது தனிமத்திற்கு ‘ராட்ஜெனியம்’ (Roentgenium) என்று பெயரிடப்பட்டது. கதிர்வீச்சின் அளவைக் குறிக்கும் அலகும் ‘ராட்ஜன்’ என்றே அழைக்கப்படுகிறது.
