சிதம்பரம் நகர கழக அமைப்பாளர் இரா.செல்வரத்தினம் – இராசகுமாரி இணையரின் மகள் சுவேதாராணி மற்றும் கடலூர் மஞ்சக்குப்பம் சிவசோதி – வாசுகி இணையரின் மகன் சிவராம கிருஷ்ணனுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா 27.3.2023 திங்கள்கிழமை திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முன்னிலையேற்று, உரையாற்றினார்.
மணமக்களை வாழ்த்தி மணடலத் தலைவர் அரங்க.பன்னீர் செல்வம், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட அமைப்பாளர் கா.கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட ப.க. தலைவர் கோ.நெடுமாறன், மருத்துவர் முத்துக்குமரன், பொதுக்குழு உறுப்பினர் வ.பூ.அரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக இரா.செல்வரத்தினம் நன்றி கூறினார்.