நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையம்

1 Min Read

நாகர்கோவில் ஒழுகினசேரியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. குமரிமாவட்டம் மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் பலரும் இயக்க நூல்களை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். நேரில் வர இயலாதவர்களுக்கு பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் கோ.வெற்றிவேந்தன் அஞ்சல் மூலமாக நூல்களை அனுப்பிவைக்கிறார். மாவட்டத்தில் யார் நூல்கள் கேட்டாலும் அவர்களுடைய இல்லத்திற்கே சென்று நேரடியாக நூல்களை கொண்டு சேர்க்கிறார். புத்தக நிலைய வளர்ச்சிக்காக திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியமும் உறுதுணையாக இருக்கிறார். மாவட்ட திராவிடர்கழக துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டரும் நூல்கள் பரப்புரை பணியினை செய்து வருகின்றார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க செயலாளர் பா.பாபு  பெரியார் இயக்க நூல்களை  வாங்கிச்சென்றார். ஒரே நாளில் மட்டும் ரூ.6000 க்கு இயக்க நூல்கள் விறுவிறுப்பாக விற்பனையாகின. கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ.70,000 க்கு இயக்க நூல்கள் விற்பனையாகியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *