5-4-2023 அன்று மேட்டூர் கழக மாவட்டத்தில் நடைபெற்ற பெரியார் 1000 வினா – விடை போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற ஓமலூர் பஞ்சுக்காளிப் பட்டி சவுத் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி தாளாளர் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தாளாளர் என்.சவுந்திரராசன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் பழநி. புள்ளையண்ணன் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மண்டல தலைவர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ஓமலூர் பெ.சவுந்திரராசன், பள்ளி முதல்வர், மற்றும் ஆசிரியப் பெரு மக்களும், திரளான மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர்.