சென்னை, மார்ச் 27– ‘திராவிட மாடல்’ ஆட்சியில் வரலாறு காணா வகையில் மகளிர் தொழில் முனைவோர் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 7மடங்கு உயர்வு! 2021–2022 இல் மகளிர்தொழில் முனைவோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 26 ஆயிரம்! 2024–2025 இல் இது 9 இலட்சத்து 4 ஆயிரமாக உயர்ந்தது! பி.ஜே.பி ஆளும் குஜராத் மாநிலத்தில் மகளிர் தொழில் முனைவோர் 2 இலட்சத்து 18 ஆயிரம் மட்டுமே, ராஜஸ்தான் மாநிலத்திலும் 3 இலட்சத்து 36 ஆயிரம் மட்டுமே! மகளிர் சாதனையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பெருமைகள் குன்றின் மேலிட்ட விளக்காய் புகழொளி பரப்புகிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மனித சமுதாயத்தில் ஏறத்தாழ சரி பாதியாக இருக்கும் மகளிர் சமுதாய முன்னேற்றத்தில் திராவிட இயக்கம் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதனால் இந்தியாவிலேயே அதிகமாக பெண்கள் கல்வி, அறிவியல், பொருளாதாரம், தொழில் முதலிய அனைத்திலும் ஆற்றல்கள் பெற்று பன்முகத் திறன்க ளுடன் வளர்ந்து இந்திய அளவில் முன்னிலை பெற்றுத் திகழ்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், திராவிட நாயகர் அவர்கள் மகளிர் முன்னேற்றத்திற்குவழிவகுக்கும் திட்டங்களை முறையாக வகுத்துச் செயல்படுத்திட இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024அய் உருவாக்கி தமிழ்நாட்டில் மகளிர் நலம் காத்து வருகிறார்கள்.
பெண்கள் முன்னேற்றத்திற்கு
அடித்தளம்!
ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே விடியல் பயணம் திட்டத்திற்கு முதல் கையெப்பமிட்டு ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்,
பெண்கள் அனைவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டம்,
படித்து முடித்து வேலைக்காக நகர்ப்புறம் வரும் பெண்கள் பாதுகாப்புடன் பணிபுரிய தோழி விடுதி கள் திட்டம் ஆகியவற்றை வெற்றிகரமாக நிறை வேற்றினார்கள்.
சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஏறத்தாழ 2 இலட்சம் மகளிர் பயன்பெற அவர்களின் ஓய்வு வயது 58 என்பதை 60 ஆக உயர்த்தியுள்ளார்கள்.
மகளிர் சுயஉதவி குழு கடன்கள் 2755.99 கோடி ரூபாயை ரத்து செய்து 1,17,617 மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த 15,88,309 மகளிர், கடன்களில் இருந்து விடுதலை பெறச் செய்தார்கள்.
இவை போலவே மகளிர் சுயஉதவி குழு கடன் உச்சவரம்பை உயர்த்தினார்கள். கைம்பெண்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் கொடுத்திட வகை செய்துள்ளார்கள்.
ஆதிதிராவிடர் மகளிர் நிலம் வாங்குவதற்கு நிதி உதவி செய்யும் நன்னிலம் மகளிர் நிலஉடைமைத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார்கள்.
மகளிர் ஓட்டுநருக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் வழங்கி அவர்கள் தொழில்புரிய வழிகாட்டினார்கள்!
அரசு ஊழியர் ஆசிரியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை 12 மாதங்களாக உயர்த்தினார்கள்!.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல்கள் நடத்தி 50 சதவீத இடங்களில் மேயர் முதலான பொறுப்புகளை மகளிருக்கு வழங்கினார்கள்.
பெண்கள் பெயரில் நிலம் வாங்கி பதிவுச் செய்தால் பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைத்துள்ளார்கள்!
புரட்சிகரமான திட்டங்கள்!
இப்படி, இந்தியாவில் எந்த மாநிலமும் எண்ணிப்பார்க்காத புதிய புரட்சிகர மான திட்டங்களை ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தொடர்ந்து நிறைவேற்றி வரும் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்கள் சுயமாகத் தொழில் தொடங்கி உலகில் தொழில் முகவர் களாக உயர்ந்திட வேண்டும் என்ப தற்காகவும் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
ஆண்களுக்கு நிகராகத் தொழில்தொடங்க ஆர்வம் கொண்டுள்ள 32 ஆயிரத்து 332 மகளிர் தொழில் முனைவோருக்கு 191 கோடியே 23 இலட்சம் ரூபாய் கடன் வழங்கி அவர்களைத் தொழில் முனைவோர் ஆக்கியுள்ளார்கள்.
இப்படித் தொழில் புரியும் மகளிரை ஊக்கப்படுத்தி தேவையான உதவிகள் அனைத்தையும் ‘திராவிட மாடல்’ ஆட்சி செய்துவருவதால் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் இந்தியாவிலேயே மிக அதிகமான பெண் தொழில் முனைவோர் இருப்பது தமிழ்நாடு தான் என்னும் உண்மை உரக்கச் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 2021–2022 ஆம் நிதியாண்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடங்கிய காலகட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை, ஒரு இலட்சத்து 26 ஆயிரமாக இருந்தது.
குன்றின் மேலிட்ட விளக்காகப்
புகழொளி பரப்புகிறது!
அந்த எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் 7 மடங்கு உயர்ந்து, 2024–2025 ஆம் நிதியாண்டில், 9 இலட்சத்து 4 ஆயிரமாக உயர்ந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு என்பது குன்றின் மேலிட்ட விளக்காகப் புகழொளி பரப்புகிறது!
அதே நேரத்தில், பி.ஜே.பி ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்துடன் ஒப்பிட்டால் அங்கு சிறு, குறு மற்றும் நடுத்தரப் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை வெறும் 2.18 இலட்சம்தான். அதே போல ராஜஸ்தான் மாநிலத்திலும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை விடக் குறைந்து, 3.36 இலட்சமாகத்தான் உள்ளது.
அண்மையில் சில நாள்களாக வெளிவந்து கொண்டிருக்கும் 2024–2025 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான அறிக்கைகள், புள்ளிவிவரங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சியே முதல் இடத்திலும் முன்னிலையிலும் திகழ்வதை பறைசாற்றுகின்றன.
