அலுவலர்களுக்கு பயிற்சி
சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 28 முதல் கட்ட பயிற்சி.
அதிமுக போட்டி
சட்டப்பேரவை தேர்தலில் 169 இடங்களில் அதிமுக போட்டி கூட்டணி கட்சிகள் 65 இடங்களில் போட்டி.
காங்கிரஸ் தலைமை அலுவலகம்
காங்கிரஸ் கட்சியின் 48 ஆண்டுகால தலைமை அலுவலகம் இருந்த அக்பர் சாலையில் இருந்து வரும் சனிக்கிழமைக்கு முன்பு காலி செய்ய வேண்டுமென்று இந்திய அரசு உத்தரவாம்.
சிவில் சட்டம்
குஜராத்தில் பொது சிவில் சட்டம் மசோதா நிறை வேறியது.
சமையல் எரிவாயு
நகர் புறங்களில் 25 நாட்கள் கிராமப்புறங்களில் 45 நாட்கள் சமையல் எரிவாயு முன்பதிவுக்கான காலக்கெடு ஒன்றிய அரசு அறிவிப்பு.
நேரடி போட்டி
புதுவையில் பதினொரு தொகுதிகளில் திமுக பாமக நேரடி போட்டி.
புதுவையில்
புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகு திக்கு காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி மனு தாக்கல் செய்தார். தொகுதியில் திமுக போட்டியிட விரும்புவதால் தன் மனதை திரும்ப பெற்றார் காங் கிரஸ் கட்சி தான் முக்கியம் தனிநபர் முக்கியமல்ல என்று கருத்து கூறினார்.
புதுகட்சி
டாக்டர் ராமதாஸ் ‘‘அய்யா பாசறை மக்கள் கட்சி’’ என்ற பெயரில் புது கட்சி ஒன்றை தொடங்குகிறார்.
நிலவில் ஆராய்ச்சி மய்யம்
ரூபாய் 2 லட்சம் கோடியில் நிலவில் நிரந்தர ஆராய்ச்சி மய்யம் 2030க்குள் நாசா அமைக்கிறது.
