மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு நடவடிக்கை சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

1 Min Read

சென்னை, மார்ச் 26 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் 100 சதவீதம் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகம் தலைமையில் நேற்று (25.3.2026) சென்னை ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 12,505 மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துதல், வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 21 வகையான மாற்றுத்திறனாளிகளின் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப் பட்டது.

இதில், மாற்றுத்திறனாளிகள் அனைத்து வாக்குச்சாவடி மய்யங்களிலும் செல்வதற்கு ஏதுவான உள் மற்றும் வெளியேறும் வழிகள், சாய்வுதளம் மற்றும் கைப்பிடிகள், வாக்குச்சாவடிகளுக்கு அருகில் பிரத்யேக வாகன நிறுத்துமிடம், சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற நடைபாதை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களை ஏற்பாடு செய்தல், வாக்காளர் உதவி மய்யம், முதலுதவி பெட்டி, ஆம்புலன்ஸ் சேவைகள் ஏற்படுத்துதல், குடிநீர், கழிவறை, வாக்குச்சாவடி நுழைவாயிலில் எளிதில் அணுகக் கூடிய வழிகாட்டுதல்கள் மற்றும் அடையாளப் பலகைகள் உள்ளிட்ட தேவையான வசதிகள் அமைத்திட வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பூஷ்ணாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் சரவணக் குமார் (வடசென்னை மாவட்டம்), சீனிவாசன் (தென்சென்னை மாவட்டம்), மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் சுமிதா சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *