தி.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.அய்., ம.ஜ.க., கருணாஸ் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு

1 Min Read

சென்னை, மார்ச் 26 திமுக கூட்டணியில் எஸ்டிபிஅய், மஜக, கருணாஸ் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. நேற்று (26.3.2026) மாலை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் திமுக குழுவை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மனிதய நேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப் பட்டு முதலமைச்சர் முன் னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை தொடர்ந்து, எஸ்டிபிஅய் கட்சி தலைவர் தெகலான் பாகவி தலைமையிலான நிர்வாகிகள் திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எஸ்டிபிஅய் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப் பட்டு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து, முக்குலத் தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் மற்றும் நிர்வாகிகள் திமுக குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர். இக்கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மஜக, எஸ்டிபிஅய், முக்குலத் தோர் புலிப்படை கட்சி ஆகிய 3 கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி தலா ஒரு தொகுதி திமுக கூட்டணியில் இக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கட்சிகள், தங்களுக்கான விருப்ப தொகுதி பட்டியலை கொடுத்துள்ளது. அதில் இருந்து ஏதாவது ஒரு தொகுதியை தேர்வு செய்து இக்கட்சிகளுக்கு இன்று தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *