அறிவியல் துணுக்குகள்!

1 Min Read

சீன மின்வாகன தயாரிப்பாளரான ‘பைட்’ (BYD), உற்பத்தி செய்துள்ள அதிநவீன சொகுசு காரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கி.மீ. தூரம் வரை செல்கிறது. மூன்று மோட்டார்களையும், மாபெரும் பேட்டரியையும் கொண்ட இந்த கார், பந்தயக் காரின் வேகத்தையும், தொலைதூரப் பயணத் திறனையும் ஒருசேர வழங்குகிறது.

விரைவில் சூடாகும் லித்தியம்–அயான் பேட்டரிகளைக் குளிர்விக்க, பாலூட்டிகளின் தோலைப் போன்ற ஒரு குளிர்விப்பு சவ்வை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். சவ்வின் நெகிழ்வான அடுக்குகள், காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, பேட்டரி சூடாகும் போது அதை நீராவியாக வெளியேற்றுகிறது. இது வெப்பத்தை 30 டிகிரி சென்டிகிரேடு வரை குறைக்கிறது.

ஆல்பபெட் நிறுவனத்தின் ‘தாரா’ திட்டம், கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கற்றைகள் வாயிலாக 25 ஜி.பி.பி.எஸ். வேகத்தில் இணைய சேவையை வழங்கும் சிறிய கருவியை உருவாக்கியுள்ளது. கட்டடங்களுக்கு இடையே 10 கி.மீ., தூரம் வரை தரவுகளைப் பரிமாறும் இந்தக் கருவியை நிறுவ, கேபிள்களோ அல்லது அலைக்கற்றை உரிமங்களோ தேவையில்லை.

சூரிய ஒளியை முழுமையாக உறிஞ்சும், ‘பிளாஸ்மோனிக் சூப்ராபால்ஸ்’ (Plasmonic Supraballs) எனும் தங்க நுண்துகள் கொத்துகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை புற ஊதா, ஒளி மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் ஆகிய ஒட்டுமொத்த சூரிய ஒளிக்கற்றையையும் ஈர்த்து, வெப்ப ஆற்றலாக மாற்றுகின்றன. சூரியசக்தி தொழில்நுட்பத்தில் இது ஒரு மைல்கல்.

ஏறத்தாழ 51.8 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய முதுகெலும்புள்ள உயிரினங்களின் புதை படிவங்கள், அவற்றுக்கு நான்கு கண்கள் இருந்ததை காட்டுகின்றன. பக்கவாட்டில் ஒரு ஜோடி மற்றும் தலைக்கு மேல் ஒரு ஜோடி என இருந்த இந்தக் கண்கள், கடலில் எதிரிகளிடமிருந்து தப்பிக்க உதவியுள்ளன. தலைக்கு மேல் இருந்த கண்கள், பின்னாளில் நவீன உயிரினங்களின் ‘பினியல் சுரப்பியாக’ (Pineal gland) பரிணாம வளர்ச்சியடைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *