டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தோழமைக் கட்சிகள் தத்தம் சொந்த சின்னங்களில் போட்டியிடும் இடங்கள் போக, திமுக வேட்பாளர்கள் மற்றும் நமது சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 175 இடங்களில் ‘உதயசூரியன்’ களம் காண்கிறது என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மாநிலங்களவையில் ‘திருநங்கையர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா, 2026’ நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இச்சட்டம் சுய அடையாளம் மற்றும் கண்ணியம் ஆகிய அடிப்படை உரிமைகளைப் பலவீனப்படுத்துவதாக கூறி, திருநங்கையருக்கான தேசியக் குழுவின் (NCTP) இரண்டு உறுப்பினர்கள், தென் மண்டலப் பிரதிநிதியான கல்கி சுப்பிரமணியமும், வடகிழக்கு மண்டல பிரதிநிதியான ரிதுபர்ணா நியோகும், எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தங்கள் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
* ஜேடி (யு) கட்சியின் மக்களவை எம்.பி. கிரிதாரி யாதவை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஜேடி(யு) மக்களவைத் தலைவரிடம் மனு தாக்கல்: பீகாரில் அண்மையில் நடந்த பேரவை தேர்தலில் கிரிதாரியின் மகன் சாணக்ய பிரகாஷ் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக கிரிதாரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
தி ஹிந்து:
* ‘வந்தே மாதரம்’: அரசு நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை; உச்ச நீதிமன்றம் குறித்த அறிவுறுத்தல், கட்டாய இணக்கத்திற்கான அச்சுறுத்தல் அல்ல’, ஒரு அறிவுரை மட்டுமே என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
* பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணையம் கடிதம்: ‘கடுமையான விதிமீறல்’ என சிபிஅய் கருத்து. தேர்தல் ஆணையத்தின் தகவல் தொடர்பு ஆவகம் ஒன்றில் பாஜக-வின் முத்திரை (சீல்) காணப்பட்டதை அடுத்து, அதனை “நிறுவன நடுநிலைமை மற்றும் நடைமுறை நேர்மைக்கு ஏற்பட்ட கடுமையான விதிமீறல்” என்று குறிப்பிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலங்களவை உறுப்பினர் பி. சந்தோஷ் குமார், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தி டெலிகிராப்:
* 1,300-க்கும் மேற்பட்ட அய்ஏஎஸ் மற்றும் 505 அய்பிஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை ஒரு ‘உலகளாவிய நகைச்சுவை’: ராகுல் விமர்சனம். ஈரான் போரில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்யக்கூடும் என்ற சூழலைச் சுட்டிக்காட்டி, பன்னாட்டு விவகாரங்களில் இந்தியாவின் பங்கு குறைந்து வருவதாக ராகுல் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
