ஏப்.1 முதல் உறுதி செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டை 72 மணி நேரத்துக்கு முன்பு ரத்து செய்தால் முழு கட்டணத்தையும் திரும்பப் பெறலாம்!

1 Min Read

சென்னை, மார்ச் 26- உறுதி செய்யப்பட்ட முன்பதிவு பயணச்சீட்டை ரயில் புறப்படுவதில் இருந்து 72 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்தால், முழு கட்டணத்தையும் திரும்ப பெறலாம் என்று, இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

உறுதி செய்யப்பட்ட முன்பதிவு ரயில் பயணச் சீட்டை ரத்து செய்வதில் இந்திய ரயில்வே மாற்றம் செய்துள்ளது. இதுகுறித்து, இந்திய ரயில்வே வெளி யிட்ட அறிவிப்பில் கூறி யிருப்பதாவது:

முன்பதிவு உறுதி செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டை, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால், கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது.

8 மணி நேரத்துக்கு முன்பாக, 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால், 50 சதவீதம் தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.

72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் பயணச்சீட்டை ரத்து செய்தால், ரத்து கட்டணம் தவிர, பயணக் கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

சேவைக் கட்டணம் உண்டு: ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால், முழு கட்டணம் திருப்பித் தரப்படும் (சேவை கட்டணம் மட்டும் எடுக்கப்படும்). இந்த மாற்றம், கடைசி நேரத்தில் பயணச்சீட்டு ரத்தை குறைக்க முடியும். மற்ற பயணிகளுக்கு இடங்கள் கிடைப்பதை மேம் படுத்தும்.

ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பு வரை, புறப்படும் இடம் மாற்றம் செய்ய முடியும். இப்போது பயணச்சீட்டை எந்தவொரு நிலையத்தின் கவுன்ட்டரிலும் ரத்து செய்யலாம். இப்புதிய மாற்றங்கள் ஏப்.1 முதல் அமலுக்கு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *