குமரி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியாருடைய நூல்கள் மற்றும் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் பரப்புரை பணிகள் குமரி மாவட்டத்தில் முழுமையாக நடைபெற்று வருகின்றன. குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் கொட்டாரத்தில் உள்ள தி.மு.க. ஒன்றிய செயலாளர் பா.பாபு, தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பொறியா ளர் ஜானி ஆகியோரிடம் இயக்க நூல்களை வழங்கி கழக குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பரப்புரை செய்தார். உடன் பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் சுசீந்திரம் மகாராஜன் மற்றும் தோழர்கள் உள்ளனர்.