“பெண்களே பேரண்டத்தின் அச்சாணி” பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நெகிழ்ச்சியான இருபெரும் விழாக் கொண்டாட்டம்!

2 Min Read

பெரியார் கல்வி நிறுவனங்கள்

திருச்சி, மார்ச் 25- பெண் விடுதலைக்காகவும், சமூகச் சமத்துவத்திற்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்த சமூகப் புரட்சியாளர் அன்னை மணியம்மையாரின் பிறந்தநாள் மற்றும் பன்னாட்டு மகளிர் தினம் ஆகியவற்றை முன்னிட்டு, திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 10.03.2026 (செவ்வாய்க்கிழமை) ஒரு உன்னதமான விழாவாக அரங்கேறியது.

விழாவின் தொடக்கமாக, பள்ளியின் இளங்கலை கணித ஆசிரியர் மற்றும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திருமதி எஸ்.செல்வி வரவேற்புரை ஆற்றினார். விழாவை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்திய அவர், அன்னை மணியம்மையாரின் தியாக வரலாற்றையும், இன்றைய நவீன சமூகத்தில் பெண்களின் பெரு வளர்ச்சியையும் சுட்டிக்காட்டி அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார்.

பள்ளியின் முதல்வர் முனை வர் க. வனிதா விழாவிற்குத் தலைமை தாங்கி, அன்னை மணியம்மையாரின் படத்திற்கு மலர்மாலை சூடி சிறப்புரை ஆற் றினார். அவர் தனது உரையில்:

“பெண்கள் வெறும் குடும்பத்தின் விளக்குகள் மட்டுமல்ல, சமூகத்தின் வழிகாட்டிகள். அன்னை மணியம்மையார் காட்டிய துணிவும், தந்தை பெரியார் விதைத்த சமத்துவமுமே இன்று நம் ஆசிரியத் தோழ மைகள் அடையும் வெற்றிக்கு அடிப்படை” என்று நெகிழ்ச்சி யுடன் குறிப்பிட்டார்.

இந்த விழாவின் முத்தாய்ப் பாக அமைந்தது பள்ளியின் முதுகலை மற்றும் இளங்கலை ஆண் ஆசிரியர்களின் பங்களிப்பு. வழக்கமான விழாக்களுக்கு மாற்றாக, தங்களது சக பெண் ஆசிரியத் தோழமைகளை சிறப்பிக்கும் விதமாக பெண்களின் பெருமை யைப் பறைசாற்றும் மெல்லிசைப் பாடல்களைப் பாடி அரங்கத்தை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

பெண்ணுரிமையின் மேன் மையைச் சொல்லும் புதுக்கவி தைகளை தங்களது கம்பீரம் காட்டி குரலில் வாசித்தனர்.

ஒரு குடும்ப உறுப்பினராக வும், சிறந்த சகப் பணியாள ராகவும் பெண் ஆசிரியர்கள் காட்டும் அர்ப்பணிப்பைப் பாராட்டி அவர்கள் நிகழ்த்திய உரைகள் அனைவரின் கண் களையும் பனிக்கச் செய்தது.

ஆண் ஆசிரியர்களின் இந்த மேன்மையான அன்பைப் பெற்றுக்கொண்டு, பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் திருமதி ஏ.ஆர்.திலகவதி நெகிழ்ச்சியுடன் ஏற்புரை வழங்கினார். விழாவின் நிறைவாக, இளங்கலை தமிழாசிரியர் திருமதி டி.கனிமொழி உணர்வுப்பூர்வமான நன்றியுரை ஆற்றினார்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்விற்கான அனைத்துப் பணிகளையும் விழா ஒருங் கிணைப்பாளர் திருமதி எஸ்.செல்வி மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் ஒரு குடும்ப விழாவைப் போல மிக நேர்த்தியாகச் செய் திருந்தனர். விழா முடிவில், பள்ளி நிர்வாகத்தின் சார் பில் அனைவருக்கும் இனிப்பு களும், சூடான தேநீரும் வழங் கப்பட்டது.

தந்தை பெரியார் கண்ட சமத்துவக் கனவு இந்தப் பள்ளி யின் வளாகத்தில் மெய்யாகிக் கொண்டிருப்பதை இந்த விழா பறைசாற்றியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *