பத்மவிபூசன் பதக்கம் பெற்ற வெளிநாட்டு அறிவியலாளர் பசுமைப்புரட்சியின் நாயகன் நார்மன் போர்லாக் பிறந்தநாள் இன்று! (25.03.1914)

1 Min Read

உலகில் பசி மற்றும் பட்டினியைப் போக்கத் தன் வாழ்நாளையே அர்ப் பணித்தவர் நார்மன் போர்லாக். கோடிக் கணக்கான மக்களின் உயிரைக் காத்த இவரை உலகம் “பசுமைப்புரட்சியின் தந்தை” என்று அன்போடு அழைக்கிறது.

நார்மன் போர்லாக் 1914-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள கிரெஸ்கோ என்ற இடத்தில் பிறந்தார். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு, மண்ணோடும் பயிர்களோடும் சிறு வயதிலேயே பிணைப்பு ஏற்பட்டது. மினசோட்டா பல்கலைக்கழகத்தில் தாவர நோயியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

1940-களில் மெக்சிகோவில் கோதுமை விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அங்கு சென்ற போர்லாக் புதிய வகை கோதுமை ரகங்களை உருவாக்கினார்.  அதிக எடையுள்ள தானியங்களைத் தாங்கும் வலிமை கொண்ட குட்டை ரக கோதுமையை உருவாக்கினார்.

பூச்சிகளாலும் நோய்களாலும் பாதிக்கப்படாத வீரியமிக்க விதைகளை அறிமுகப்படுத்தினார்.

இதன் விளைவாக மெக்சிகோ நாடு கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதோடு, ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாறியது.

1960-களில் இந்தியா பெரும் பஞ்சத்தைச் சந்தித்தபோது, நார்மன் போர்லாக் மற்றும் இந்திய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் முயற்சியால் போர்லாக்கின் வீரிய ரக விதைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இது இந்தியா வில் உணவு உற்பத்தியைப் பல மடங்கு பெருக்கி, நாட்டைப் பஞ்சத்தின் பிடியிலிருந்து மீட்டது.

அமைதி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக இவர் ஆற்றியப் பணிக்காக 1970-ஆம் ஆண்டு அமைதிக் கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இது தவிர:

அமெரிக்க அதிபரின் சுதந்திரப் பதக்கம். இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷண் (2006) ஆகியவையும் வழங்கப்பட்டன.

“பசி இருக்கும் இடத்தில் அமைதி இருக்க முடியாது” என்று முழங்கிய நார்மன் போர்லாக், செப்டம்பர் 12, 2009 அன்று மறைந்தார். அவரது 112ஆவது பிறந்தநாளான இன்று (25.3.2026) நவீன விவசாயத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மண்ணையும் மக்களையும் காப்போம் என்று உறுதி ஏற்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *