பெங்களூரு வானூர்தியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

1 Min Read

இந்திய ராணுவத்தின்கீழ் செயல்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (டிஆர்டிஓ) ஒரு முதன்மை ஆய்வகமான, பெங்களூருவில் உள்ள வானூர்தியியல் மேம்பாட்டு நிறுவனம் (ஏடிஇ)காலியாகவுள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.: ADE / HRD / 01 /2026

பணி: ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (JRF)

காலியிடங்கள்: 6

ஊதியம்: மாதம் ரூ.37,000

தகுதி: பொறியியல் துறையில் ஏரோனாட்டிக்கல்/ மெக்கானிக்கல், CSE, ECE ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் முடித்து கேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை தரப்படும்.

பணி: ரிசர்ச் அசோசியேட் (RA)

காலியிடங்கள்: 2

ஊதியம்: மாதம் ரூ.67,000

தகுதி: பொறியியல் துறையில் ஏரோனாட்டிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெட்டீரியல் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் முதல் வகுப்பில் எம்.இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை தரப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்விற்கு வரும்போது அசல் சான்றிதழ்களை கொண்டு வரவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி விவரம்:

ஜேஆர்எஃப் பணிக்கு 7.4.2026 மற்றும் 8.4.2026 தேதி நடைபெறும். ஆர்ஏ பணிக்கு 9.4.2026-இல் நடைபெறுகிறது.

இடம்: Aeronautical Development Establishment, DRDO, Bengalore – 560 075.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *