முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில்
ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி ஆய்வு அறிக்கை!
ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி ஆய்வு அறிக்கை!
சென்னை, மார்ச் 24– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியில், மேல்நிலைப் பள்ளி மாணவ – மாணவியர் சேர்க்கையில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்துள்ளது.
இது ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி ஆய்வு அறிக்கை வெளி யிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் மாணவிகள் சேர்க்கை 49.8 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை 46.6 சதவீதம் மட்டுமே !
பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் மாணவிகள் 24.7சதவீதம் – மாணவர்கள் 24 சதவீதம்
மராட்டிய மாநிலத்தில் மாணவிகள் 47.1 சதவீதம் – மாணவர்கள் 46.7 சதவீதம்
உத்திரப்பிரதேசத்தில் மாணவிகள் 31.7 சதவீதம் – மாணவர்கள் 31.1 சதவீதம்
இராஜஸ்தானில் மாணவிகள் 33.6 சதவீதம் – மாணவர்கள் 34.2 சதவீதம்
மத்தியப் பிரதேசத்தில் மாணவிகள் 24.9 சதவீதம் – மாணவர்கள் 24.7 சதவீதம்
என்று ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை (UDISE)யில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–
தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே
என் வாழ்வின் ஒரே குறிக்கோள்
என் வாழ்வின் ஒரே குறிக்கோள்
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே என் வாழ்வின் ஒரே குறிக்கோள் என்று கூறி அந்த குறிக்கோளை அடைந்திட ஓய்வின்றி உழைத்து வருகிறார்.
கல்விச் செலவுகளும், மருத்துவச் செலவுகளும் ஒவ்வொரு குடும்பத்தில் முன்னேற்றத்திலும், தடைக்கற்களை எழுப்புகின்றன. அதிலும் ஏழைக் குடும்பங்க ளில் இது மிகவும் அதிகமாகும்.
சமத்துவமும், சமதர்மமும் செழித்தால்தான் தமிழ்நாடு தழைக்கும். பொருளாதாரச் சமத்துவம் சிறக்கும் எனும் அடிப்படையில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஏழை எளியோருக்கு உதவும் திட்டங்க ளுக்கே முன்னுரிமை தந்தார்.
தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது!
விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் முதலிய திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி செயல்படுத்தியது. இதனால் மேல்நிலைப்பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேரும் மாணவ– மாணவியர் எண்ணிக்கை அ.தி.மு.க. ஆட்சியை விட அதிகரித்து தமிழ்நாடு சாதனைகள் படைத்துள்ளது.
2020–2021 அ.தி.மு.க. ஆட்சியில் மேல்நிலைக்கல்வி மாணவியர்கள் சேர்க்கை 49.8 சதவீதம் இன்று ‘திராவிட மாடல்’ ஆட்சி யில் 2024–2025 ஆம் ஆண்டு கணக்கின்படி அது 76 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
அதே போல 2020–2021 அ.தி.மு.க. ஆட்சியில் மேல்நிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கை 46.6 சதவீதம் இன்று ‘திராவிட மாடல்’ ஆட்சியில் 2024–2025 ஆம் ஆண்டு கணக்கின்படி அது 71 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் அவல நிலை!
குஜராத் மாநிலத்தில் மாணவிகள் 24.7 சதவீதம் – மாணவர்கள் 24 சதவீதம்,
மராட்டிய மாநிலத்தில் மாணவிகள் 47.1 சதவீதம் – மாணவர்கள் 46.7 சதவீதம்,
உத்திரப்பிரதேசத்தில் மாணவிகள் 31.7 சதவீதம் – மாணவர்கள் 31.1 சதவீதம்,
இராஜஸ்தானில் மாணவிகள் 33.6 சதவீதம் – மாணவர்கள் 34.2 சதவீதம்,
மத்தியப் பிரதேசத்தில் மாணவிகள் 24.9 சதவீதம் – மாணவர்கள் 24.7 சதவீதம்
இப்படி பா.ஜ.க ஆளும் எல்லா மாநி லங்களும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாத னையை நெருங்கக்கூட முடியவில்லை.
‘திராவிட மாடல்’ ஆட்சியால் விளைந்த இந்த சாதனைக்கு ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை (UDISE) சான்று கூறியுள்ளது.
தமிழ்நாடு பெற்றுள்ள இந்த சாத னையைத் தொட்டுக் கூடப் பார்க்க முடியாத அளவில் இந்தியாவில் பா.ஜ.க ஆளும் இதர மாநிலங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.
இந்தச் சாதனை எப்படி நிகழ்ந்தது? ‘திராவிட மாடல்’ அரசு 2021–இல் ஆட்சிப் பொறுப்பேற்றப்பின் செயல்படுத்திய விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் முதலிய புதுமையான திட்டங்களால் தான் இந்தப்புரட்சி மலர் பூத்துள்ளது! என்பதே உண்மையாகும்.
