இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம்
வல்லம், ஏப்.8– பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) கல்வியியல் துறை, பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் மற்றும் சிறீகாமாட்சி மெடிக்கல் சென்டர் தஞ்சாவூர் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் வல்லம் பேரூராட்சி அலுவலகத்திலுள்ள சமுதாயக் கூடத் தில் 30.03.2023 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வியியல் துறை பேராசி ரியர் சு.சீனிவாசன் வரவேற்புரையாற் றினார்.
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் செ.வேலுசாமி தலைமையுரை யில் கரோனா காலத்தில் மருத்துவர்க ளின் பெரும் பங்களிப்பைக் குறித்து உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து வல்லம் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வ ராணி கல்யாணசுந்தரம் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். சிறீகாமாட்சி மருத்துவமனையின் மரு. கோ. கார்த்திகேயன், தலைமை நீரழிவு நோய் மருத்துவர், மரு. வர்ஷா, மற்றும் மரு. டி.பிரேம் ஆகியோர் பொது மக் களை பரிசோதித்து அவர்களுக்கு தேவையான மருந்துகளையும், அறி வுரைகளையும் வழங்கினார்கள்.
சிறீ காமாட்சி மருத்துவ மனையின் மக்கள் தொடர்பு அலுவலர் வெ.பழனி பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறைத் தலைவர் பேரா.தமிழ்வாணன் மற்றும் பல்கலைக்கழக கல்வியியல் துறையை சார்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு ஆற்றினார்.