வருங்கால விஞ்ஞானிகளின் கைவண்ணத்தில் உருவான ‘ரோபோ’க்கள் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் ‘ரோபோட்டிக்’ கண்காட்சி..!

பெரியார் கல்வி நிறுவனங்கள்

பெரியார் கல்வி நிறுவனங்கள்

திருச்சி, மார்ச் 24- இன்றைய தொழில் நுட்ப யுகத்தில், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் துறைகள் உலகையே ஆண்டு வருகின்றன. இந்தத் துறைகளில் நம் நாட்டு மாணவர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் ‘ரோபோட்டிக்’ (Robotic) கண்காட்சி மற்றும் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றன.

வியக்க வைத்த மாணவர்களின் படைப்புகள்:

பள்ளியின் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் வருங்கால விஞ்ஞானிகளின் கைவண்ணத்தில் உருவான புதுமையான படைப்புகள், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. 6-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி, துடைப்பம் மற்றும் அதிர்வு மோட்டார்களைக் கொண்டு ‘பிரஷ் பாட்’ (Brush Bot), நடனமாடும் ரோபோக்கள், மற்றும் கழிவுப் பொருட்களிலிருந்து (Junk Bots) ரோபோக்களை உருவாக்கி அசத்தினர்.

7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாண வர்கள், இன்னும் ஒரு படி மேலே சென்று சமூகத்திற்குப் பயன்படும் வகையிலான நுட்பமான திட்டங்களை வடிவமைத்திருந்தனர். அவற்றில் சில முக்கியப் படைப்புகள்: கோடுகளைப் பின்பற்றிச் செல்லும் ரோபோக்கள், மழை நீர் எச்சரிக்கை கருவி, தீ எச்சரிக்கை கருவி, பார்வையற்றோருக்கான உதவிக்கருவி, தானியங்கி வெற்றிடத் தூய்மிப்பான், தானியங்கி மணி அடிக்கும் கருவி மற்றும் நீரியல் ஏவுகணை அமைப்பு போன்றவை ஆகும்.

சிறப்பு விருந்தினர்கள் வருகை:

இந்த அறிவியல் கொண்டாட்டத் திற்குத் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து சிறப்பித்தனர்:

முனைவர் டி. கிருஷ்ணகுமார் (உயிரித் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் மற்றும் சேர்க்கைப் பிரிவின் இணை இயக்குநர்).

ஆர். ராகேஷ் (ரோபோட்டிக் மற்றும் மின்னணுவியல் துறைப் பேராசிரியர்).

என். சிவக்குமார் (இயந்திரவியல் துறைப் பேராசிரியர்).

வி. சரவணகுமார் (மின்னணுவியல் துறைப் பேராசிரியர்).

சிறப்பு விருந்தினர்கள் மாணவர் களின் ஒவ்வொரு படைப்பையும் நேரில் பார்வையிட்டு, மாணவர்களின் நுட்பமான அறிவு மற்றும் படைப்பாற் றலைப் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.

வெற்றி பெற்ற சாதனையாளர்கள் (வகுப்பு வாரியாக):

இப்போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களில் மிகச் சிறப்பா கச் செயல்பட்டதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்ட 23 வெற்றியாளர்கள் விவரம் பின் வருமாறு:

ஆறாம் வகுப்பு:

ஜே. பி. நிகித பாலா, ஆர். முகமது ஃபைசல், ஆர். கவின், எம். ஃபாசிலட் மரியம், எல். நந்தினி

ஏழாம் வகுப்பு:

எஸ். முகமது ஷுகைப், ஜே. ஹிருத்திக், பி. கிஷன் பிரசந்தா, வி. சுஜய சிறீ, பி. நிதிலா சிறீ, எஸ். லக்ஷனா, பி. தன்ஷிகா சிறீ, வி. ஆராதனா, இ. யாழினி,

எட்டாம் வகுப்பு:

எஸ். ஏ. குமரன், மு. அபினவ், எஸ். தருண் வெங்கட், ஏ. வாகீஸ்வரி, கே. எம். சுஜிதா, பி. அனிஷா, டி. எஸ். லோகேஷ், எஸ். விக்னேஷ்வரன், எம். முகமது ஃபதின்,

பரிசளிப்பு மற்றும் பாராட்டு:

பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

ஒருங்கிணைப்பு:

இந்த மாபெரும் விழாவிற்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் ரோபோட்டிக் பயிற்சி ஆசிரியை பி.திவ்யா, கலை ஆசிரியை விஜயலட்சுமி, முதுகலை உயிரியல் ஆசிரியர் ஜி. சிவராமகிருஷ்ணன், இளங்கலை அறிவியல் ஆசிரியர் ம. இரத்தினச்செல்வன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

தொழில்நுட்ப அறிவை ஆக்கபூர் வமாகப் பயன்படுத்திய மாணவர்களின் இந்த முயற்சி, வருங்காலத்தில் அவர்கள் சிறந்த கண்டுபிடிப்பாளர்களாகத் திகழ்வார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *