புழக்கத்தில் 194 தரமற்ற மருந்துகள், 4 போலி மருந்துகள் கண்டுபிடிப்பு! மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

சென்னை, மார்ச் 24- நாடு முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மேற்கொண்ட அதிரடி ஆய்வில், 194 மருந்துகள் தரமற்றவை என்பதும், 4 மருந்துகள் முற்றிலும் போலியானவை என்பதும் கண்டறியப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வு பின்னணி

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சந்தையில் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கண்டறியப்பட்ட
முக்கியப் பாதிப்புகள்

இந்த ஆய்வின் முடிவில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீழ்க்கண்ட பாதிப்புகளுக்கான மருந்துகள் தரமற்றவை எனப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன:

உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல் மற்றும் சளி கிருமி தொற்று, செரிமானக் கோளாறுகள், குறிப்பாக, 194 மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகோல்களை எட்டவில்லை என்றும், 4 மருந்துகள் போலியான முறையில் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தற்போது கண்டறியப்பட்டுள்ள தரம் குறைந்த மற்றும் போலி மருந்துகளின் முழுத் பட்டியலையும் ஒன்றிய மருந்துத் தர கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

விபரங்களை அறிய: https://cdsco.gov.in/ பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மருந்துகள் பாதுகாப்பானவை தானா என்பதை இந்த இணையதள முகவரியில் சரிபார்த்து, விழிப்புணர்வுடன் செயல்படுமாறு மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *