ஈரான் அணு உலை மீது 5 நாட்களுக்கு தாக்குதல் இல்லை: டிரம்ப் திடீர் அறிவிப்பு

நியூயார்க், மார்ச் 24– மேற் காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும், அய்.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப் புகளும் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், 3 வாரங்களுக்கும் மேலாக மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் வலைதள பதிவில் நேற்று (23.3.2026) வெளியிட்ட செய் தியில், அமெரிக்காவும் ஈரானும் கடந்த 2 நாட் களாக மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. மத்திய கிழக்கில் நம்முடைய பகைமைக்கு முற்றிலுமொரு தீர்வு காணப்பட உள்ளது.

இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும். அதனடிப்படையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன்.

நடந்து வரும் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு கிடைத்த வெற்றியின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்து உள்ளார். இதில், கவனம் செலுத்திய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

எந்த பேச்சுவார்த்தையும்
நடத்தவில்லை – ஈரான்

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் எங்களின் எச்சரிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பணிந்துவிட்டார் என்று விமர்சனமும் செய்துள்ளது.

டிரம்புடன் நேரடியாகவோ, மத்தியஸ்தர் மூலமோ பேசவில்லை என ஈரான் மறுத்து வரும் நிலையில், ஈரான் சார்பில் யாருடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரானில் இருந்து வரும் இந்த முரண்பட்ட கூற்றுகள்படி, தற்காலிக போர் நிறுத்தம் முடிந்தவுடன் பதற்றம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *