சென்னை, மார்ச் 24 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பதற்காகச் சிறப்புப் பார்வையாளராக பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு
சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் அவர்களுக்கென சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயகர் பவன் இணைப்பு கட்டடத்தின் 412-ஆவது அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான புகார்கள் அல்லது விவகாரங்கள் குறித்து இவரைத் தாராளமாகத் தொடர்பு கொள்ளலாம்: தொலைப்பேசி எண்: 044 – 2833 8378 செல்பேசி எண்: 78453 21461 மின்னஞ்சல் முகவரி: [email protected] மேலும், இவருடைய தொடர்பு அலுவலரை (Liaison Officer) 95513 22999 என்ற செல்பேசி எண் வாயிலாக அணுகலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
