புதுடில்லி, மார்ச் 23 இந்தியாவில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகையை ஒன்றிய அரசு வழங்கி வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகின்றன.இதுகுறித்து விளக்கம் அளித்த ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்பகம், “இதுபோன்ற செய்திகள் உண்மை இல்லை. ஒன்றிய அரசு இதுபோன்ற எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இதுபோன்ற தகவல்களின் உண்மைத்தன்மையை அறிய 87997 11259 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை தொடர்புகொள்ளலாம்” என தெரிவித்துள்ளது.
பார்ப்பனருக்கு எதிரான பேச்சை தடுக்க கோரிய மனு தள்ளுபடி
புதுடில்லி, மார்ச் 23 உச்ச நீதிமன்றத்தில் மகாலிங்கம் பாலாஜி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘பார்ப்பன சமூகத்தைக் குறிவைக்கும் வெறுப்புப் பேச்சை ஜாதிய பாகுபாடு குற்றமாகக் கருத வேண்டும். பார்ப்பன சமூகத்துக்கு எதிராக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெறுப்புப் பிரச்சாரம் செய்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயன், இது போன்ற சம்ப வங்களுக்கு எதிராக உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம் என்று அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தனர்.
என்று ஒழியும் இந்த கொடுமை!
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு!
பொதுமக்கள் அவதி
தேர்தல் பறக்கும்படை சோதனையால் அன்றாட தேவையான பொருட்களையும், பணத்தையும் எடுத்துச் செல்ல பொதுமக்கள் அவதி,.
தவெக குப்பைத் தொட்டியா?
புதுச்சேரி மாநில தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அரசியல்வாதிகள், தவெக பக்கம் செல்லும் பரிதாப நிலை!
வந்து சேர்ந்தது!
சென்னை துறைமுகத்திற்கு ஒரு லட்சம் டன் கச்சா எண்ணையுடன் வந்து சேர்ந்தது ரஷ்யா கப்பல்.
வாய்ப்பில்லை!
பறவை காய்ச்சல், மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்.
வழக்குப் பதிவு!
‘தி.மு.க. தீய சக்தி’ என்று சிறுவர்களை முழக்கமிட வைத்துப் பிரச்சாரம் செய்த தவெக மாவட்டச் செயலாளர், நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு.
ஒரு தகவல்!
வாக்காளர் அடையாள அட்டையில் எழுத்துப் பிழை இருந்தாலும், பொருட்படுத்தத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
