இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சித் திட்டம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்த ஆண்டுக்கான ‘யுவிகா’பயிற்சி 2026 மே மாதம் நடக்க உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் 27 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம்.

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில்,‘ யுவிகா ’ (இளம் விஞ்ஞானி) என்ற திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 பேர்

இத்திட்டத்தின்கீழ் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, இஸ்ரோ மய்யங்களில் விண்வெளி அறிவியல், தொழில்நுட்பங்கள் தொடர்பாக பல்வேறு செய்முறை விளக்க பயிற்சிகள் அளிக்கப்படும். விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘யுவிகா’பயிற்சி 2026 மே மாதம் நடக்க உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் 27 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம். பள்ளிகளில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பம் உள்ளவர்கள் https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களின் தற்காலிகப் பட்டியல் மார்ச் இறுதியில் வெளியாகும். அந்த மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, ஏப்ரல் 20 ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

இஸ்ரோவின் 7 ஆய்வு மய்யங்களில் பயிற்சி

தேர்வு செய்யப்படும் மாணவர் களுக்கு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மய்யம் திருவனந்தபுரம், சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மய்யம், சிறீஹரிகோட்டா உட்பட இஸ்ரோவின் 7 ஆய்வு மய்யங்களில் 2026 மே மாதம் 11-22 வரை பயிற்சி வழங்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆகவே, விண்வெளி துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள யுவிகா ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு ஆகவே இவ் வாய்ப்பினை பயன் படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

இது சார்ந்த மேலும் தகவல்களுக்கு இஸ்ரோவினால் அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் கழகமான கலிலியோ அறிவியல் கழகத்தைச் சேர்ந்த கண்ணபிரான் என்னும் அரசுப் பள்ளி ஆசிரியரை 8778201926 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளத்தில் மேலதிக விவரங்க கொடுக்கப்பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *