பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது

2 Min Read

அரசியல்

சென்னை, ஏப். 9- ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதையொட்டி, நேற்று (8.4.2023) தமிழ்நாடு வந்த பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும்தொண் டர்கள் கலந்து கொண் டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக தலைவர்கள் பேசியதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி: காங்கிரஸ் அரசியல் ரீதியாக தவறிழைக் காத கட்சி. ஜனநாயகத்தை தரம் தாழ்த்தி ராகுல் காந்தி யால் பேச முடியாது. ஏனென் றால் நாட்டின் ஜனநாயகம் காங்கிரஸால் உருவாக்கப் பட்டு, வளர்க்கப்பட்டு, பாது காக்கப்பட்டு வருகிறது. அதனை சேதமடைய விடமாட்டோம் என்பதே காங்கிரஸ் நிலைப் பாடு. நமது லட்சியத்தை அடிப் படையாக கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. மதவாத எதிர்ப்பு என்ற நேர்கோட்டில் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். ஆனால் அரசும், காவல்துறையும் வெவ் வேறு நிலைப்பாட்டில் உள் ளன. காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமாரை காவல் துறையினர் வீட்டில் சிறை வைத்துள்ளனர். காவல்துறை யின் நடவடிக்கை வருத்தமளிக் கிறது.

சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை: நாட்டில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக ராகுல் காந்தியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் திணறு கிறார். ராஜீவ் காந்தி கொலை யாளிகளுக்கு கருணை காட் டியவர்களுக்கு ராகுல் மீது ஏன் கருணை இல்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் முன் னாள் தலைவர் கே.வீ.தங்க பாலு: சுதந்திர இந்திய வர லாற்றில் நாடாளுமன்றத்தை ஒன்றிய அரசு முடக்கிய செயல் நடந்ததில்லை.

ஜோதிமணி மக்களவை உறுப்பினர்: நாட்டின் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய பிரதமர் நாடாளு மன்ற கூட்டத் தொடர் முடி யும் போதே அவைக்கு வரு கிறார். நாடாளுமன்ற பதவி போய் ஒரு ஆண்டு காலமான குலாம் நபி ஆசாத்துக்கு வீட் டைகாலி செய்ய அறிவிக்கை அனுப்பலாமே. அவ்வாறு செய்யாமல் தகுதி இழப்பு செய்யப்பட்ட உடனே ராகு லுக்கு அறிவிக்கை அனுப்பப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கள் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் அசன் மவுலானா, துரை சந் திரசேகர், அகில இந்திய காங் கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத்,தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, தமிழ்நாடு இளைஞர் காங்கி ரஸ் தலைவர் லெனின் பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ரஞ்சன் குமாருக்கு வீட்டு சிறை: காங்கிரஸ் எஸ்சி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார், நேற்று கருப்பு பலூன் களை பறக்க விட இருந்ததாக காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத் தது. 

இதையடுத்து மதுரவாயல் நூம்பல்பகுதியில் வசிக்கும் ரஞ்சன் குமார் வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தி, கருப்பு பலூன்களை பறிமுதல் செய்தனர். மேலும், ரஞ்சன் குமாரை வீட்டுச் சிறையில் வைத்து காவல்துறையினர் கண்காணித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *