பட்டுக்கோட்டை, மார்ச் 23- பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் தளபதி அழகிரி 77ஆவது நினைவு நாள் (28.3.2026) அன்று பட்டுக்கோட்டையில் நடக்கும் பரப்புரை கூட்டத்தில் தமிழர் தலைவர் பேசுகிறார். கூட்டத்தை எழுச்சியுடன் நடத்திட பட்டுக்கோட்டை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.
பட்டுக்கோட்டை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் க.அண்ணாதுரை அலுவலகத்தில் உற்சாகமாக நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தலைமையேற்று கூட்டத்தின் நோக்கங்களை எடுத்து ரைத்தார்.
மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் துரை. பகுத்தறிவன் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட காப்பாளர் அரு.நல்லத்தம்பி, மாவட்ட துணைத் தலைவர் முத்து. துரைராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சோம.நீலகண்டன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் புலவஞ்சி இரா. காமராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர் என்.ஆர்.கே.நாராயணன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் மாணிக்க.சந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.
மாவட்டக் காப்பாளர் பெ.வீரையன், பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, ஆகியோர் கருத்து ரையாற்றினர்.
பொதுக்குழு உறுப்பினர் இரா. நீலகண்டன் உரையாற்றி தீர்மானங்களை வாசித்தார்.
மாவட்ட இளைஞர் அணித் தலைவர் சு.அரவிந்த்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆ.ரெத்தினசபாபதி, மதுக்கூர் ஒன்றியத் தலைவர் பெ.அண்ணாதுரை, மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் அத்திஆடலரசு, மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.சிவஞானம், சேது பாவாச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆ.சண்முகவேலு, பட்டுக்கோட்டை நகர இளைஞரணி அமைப்பாளர் ம.குமரவேல். மதுக்கூர் ஒன்றிய துணைச் செயலாளர் மண்டலக்கோட்டை கு.சரவணன், கருப்பூர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் சி.ரெங்கசாமி, நன்றி கூறினார்
இரங்கல் தீர்மானம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை காளிதாசின் வாழ்விணையரும் மாவட்டச் செயலாளர் கா. தென்னவன். கா.தென்னரசு, ஆகியோரின் தாயாரும் கா.பேபி, பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் வை.சிதம்பரம் அவர்களின் மூத்த சகோதரர் பேராவூரணி மல்லிகை வை. முத்துராமலிங்கம், மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் ஆடலரசு, அவர்களின் தாயார் வை.இந்திராணி, ஏனாதி ராஜா, சொக்கனாவூர் கு.சிவாஜி, சகோதரர் கு.பிச்சைக்கண்ணு, வழக்குரைஞரணி மாநில செயலாளர் வழக்குரைஞர் மு. சித்தார்த்தன், ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன், அழகிரி அவர்களின் 77-ஆம் ஆண்டு நினைவு நாள் பரப்புரைக் கூட்டத்தை 28-03-2026 அன்று மாலை 6 மணியளவில் பட்டுக்கோட்டையில் நடத்திட வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன்.
பட்டுக்கேட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை அருகில் பொதுக் கூட்டத்தை மிக எழுச்சியுடன் நடத்துவது எனவும் பட்டுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைத் தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களுக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
நிகழ்வில் கழகத் தோழர்கள் குடும் பத்துடன் பங்கேற்பதுடன் பெருமளவில் பொதுமக்கனை பங்கேற்கச்செய்வது என முடிவு செய்யப்பட்டது.
மார்ச்-28 பட்டுக்கோடையில் நடைபெறும் சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் 77ஆவது நினைவு நாள் பரப்புரை கூட்டம்
ஏற்பாட்டுக் குழு.
ஒருங்கிணைப்பாளர்கள்: இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப் பாளர், வை.சிதம்பரம், மாவட்டத் தலைவர்
தலைவர்: பெ.வீரையன், மாவட்ட காப்பாளர்
செயலாளர்: கா.தென்னவன் மாவட்ட செயலாளர்
பொருளாளர்: புலவஞ்சி இரா. காமராஜ், மாவட்ட ப.க. செயலாளர்.
துணைத் தலைவர்கள் அரு. நல்லதம்பி, மாவட்ட காப்பாளர்
ரெத்தினசபாபதி, மாவட்டம் ப.க. தலைவர்
துணைச் செயலாளர்கள்: சிற்பி வை.சேகர் பட்டுக்கோட்டை நகர தலைவர் அ.அண்ணாதுரை, மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர்
கடைவீதி பிரச்சார வசூல் குழு
தலைவர்: முத்து.துரைராசு, மாவட்டத் துணைத் தலைவர்.
செயலாளர்: நாகை. நாத்திக. பொன் முடி, மாநில இளைஞரணி செயலாளர்.
பொருளாளர்: இரா. நீலகண்டன் பொதுக்குழு உறுப்பினர்
துணைத் தலைவர்கள்: சோம.நீலகண்டன், மாவட்ட துணைச் செயலாளர்
ஏனாதி சி.ரெங்கசாமி, பட்டுக் கோட்டை ஒன்றிய செயலாளர்
துணைச் செயலாளர்கள்: சு.அரவிந் குமார், மாவட்ட இளைஞரணி தலைவர், புலவஞ்சி அண்ணாதுரை, மதுக்கூர் ஒன்றிய தலைவர்
குழுவினர் விவரம்
காளிதாசன் பெரியார் பெருந் தொண்டர் மாணிக்க.சந்திரன், மாவட்ட ப.க துணைத் தலைவர், சி.ஜெகநாதன், சேதுபாவாசத்திர ஒன்றியத் தலைவர், ரெ.வீரமணி, பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர், மு.தமிழ்ச்செல்வன், பேராவூரணி ஒன்றியத் தலைவர், ஆ.சண்முகவேல், சேதுபாவாசத்திர ஒன்றியச் செயலாளர்,அ.பாலசுப்ர மணியன் பேராவூரணி ஒன்றிய செயலாளர், சி.சந்திரமோகன், பேராவூரணி நகரத் தலைவர், வசி, மாவட்ட இளைஞரணி செயலாளர், செ.அழகரசன் பட்டுக்கோட்டை நகர ப.க. தலைவர், கனக.ராமச்சந்திரன் சேதுபாவாசத்திர ஒன்றிய ப.க. தலைவர், வை.ராதாகிருஷ்ணன் மதுக்கூர் ஒன்றியத் துணைத் தலைவர், அத்தி வை.ஆடலரசு, மதுக்கூர் ஒன்றிய செயலாளர், சொக்கநாவூர் கு.சிவாஜி, துரை.பகுத்தறிவன் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்,ம.குமரவேல் பட்டுக்கோட்டை நகர இளைஞரணி அமைப்பாளர், சமரன் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர், கருப்பூர் முருகேசன், மதுக்கூர் ஒன்றியத் துணைச் செயலாளர் மண்டலக்கோட்டை கு.சரவணன், மா.சிவஞானம் மதுக்கூர் ஒன்றிய ப.க தலைவர்வி.பி.சரவணன் மதுக்கூர் நகரத் தலைவர், ரெ.பாலா மதுக்கூர் நகரச் செயலாளர், த.நீலகண்டன் பேராவூரணி நகரத் தலைவர்.
