நாகர்கோவில், நவ. 5- மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற் கொள்ள இருக்கும் முத் தமிழ் தேர் அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் நேற்று (4.11.2023) புறப்பட்டது.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் இந் தப் பயணத்தை, அமைச் சர்கள் கே.ஆர். பெரிய கருப்பன், அன்பில் மகேஸ், மனோ தங்கராஜ், கயல் விழி செல்வராஜ் ஆகி யோர் முரசு கொட்டித் தொடங்கிவைத்தனர்.
இதில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசம்போது, “எழுத்தை மூச்சாகக் கொண்ட கலைஞர் பயன்படுத்திய பேனாவடிவில் ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது. அவரது ஒளிப்படங்கள் ஊர்தியின் வெளியே இடம்பெற்றுள்ளன. அவரது சிறப்புகளை விளக்கும் குறும்படத்தை திரையிடும் வகையில் ஒளித்திரையும் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இந்த ஊர்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். வாகனத் தின் உள்ளே மேனாள் முதலமைச்சர் கலைஞர் வசித்தகோபாலபுரம் இல்ல உள்வடிவமும், அதில் அஞ்சுகம் அம் மாள் சிலையும், அருகில் கலைஞர் அமர்ந்திருப்பது போன்ற சிலையும், அவர் பயன்படுத்திய நூலகத் தின் மாதிரி வடிவமைப் பும் உருவாக்கப்பட்டுள் ளன. மாநிலம் முழுவதும் 30 மாவட்டங்களுக்கு பய ணம் மேற்கொள்ளும் இந்த அலங்கார ஊர்தி, வரும் டிசம்பர் 4ஆ-ம் தேதி சென்னைக்கு வரும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில், குமரி மாவட்ட ஆட்சியர் சிறீதர், மக்களவை உறுப் பினர் விஜய் வசந்த், சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.