அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ. 94 ஆக சரிந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அதனால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விநியோக பாதிப்பு ஆகியவை இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. மேலும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து தங்கள் முதலீடுகளை அதிகளவில் வெளியேற்றி வருகின்றனர்.
போரால் எத்தனாலுக்கு மாறும் வியட்நாம்
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போரால் இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் பெட்ரோல் 50 விழுக்காடும் டீசல், 70 விழுக்காடும் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் எத்தனால் கலந்த ‘E10’ ரக பெட்ரோல் (10 விழுக்காடும் எத்தனால் கலந்த பெட்ரோல்) பயன்பாட்டிற்கு அடுத்த மாதம் முதல் வியட்நாம் மாற உள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே ‘E20’ ரக பெட்ரோல் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
