பறிபோன பல்லாயிரம் உயிர்கள்… உயர்ந்த விலைவாசி… சரிந்த பொருளாதாரம்! அமெரிக்கா – ஈரான் போர் தந்தது என்ன?

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வாசிங்டன், மார்ச் 22- உலக நாடுகள் பன்னாட்டு அளவில் தங்களது வர்த்தகத்தை டாலரில் நடத்திக் கொண்டிருப்பதாலும், உலகின் பல நாடுகளின் வர்த்தகங்களின் ஏற்றுமதி, இறக்குமதியில் அமெரிக்காவின் பங்கு இருப்பதாலும் அமெரிக்கா எடுக்கும் எந்தவொரு முடிவும் அமெரிக்காவிற்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாத பாமரனையும் நேரடியாக பாதிக்கும் திறன் கொண்டது.

அப்படித்தான் இந்த ஈரான் போர் மாறியிருக்கிறது.

உலகின் வல்லரசு நாடு என்று அமெரிக்கா தன்னை அறிவித்துக் கொண்டாலும், அந்த நாட்டு அதிபர்கள் சிலரின் சர்வாதிகாரமான முடிவுகள் உலக நாடுகளை கடுமையாக பாதிக்கிறது. பொதுவாகவே இஸ்லாமிய நாடுகளுடன் அமெரிக்காவிற்கு பெரியளவில் சுமூகமான உறவு இருந்ததே கிடையாது. அதுவும் ஈராக், ஈரான், லிபியா போன்ற நாடுகளுடன் எப்போதும் மோதல் போக்குதான் இருந்து வருகிறது.

இஸ்ரேல் – ஈரான் இடையே யான பதற்றமான சூழலுக்கு மத்தியில் இஸ்ரேலுக்காக வரிந்து கட்டி களத்தில் இறங்கிய அமெரிக்கா, திடீரென ஈரான் மீது போரைத் தொடங்கியது. இதில் அந்த நாட்டின் உச்சத் தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இது ஈரான் அரசை கொந்தளிப்பு அடையச் செய்தது.

ஆட்டம் காண வைத்த
கச்சா எண்ணெய்:

இஸ்ரேல் மீது பதில் தாக்கு தல் நடத்தியது மட்டுமின்றி அமெரிக்கா ஆதரவு மனப் பான்மை கொண்ட வளைகுடா நாடுகள் மீது யாரும் எதிர் பாராத விதமாக ஈரான் தாக்கு தல் நடத்தியது. இதனால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க பெருநிறுவனங்களின் முதலாளிகள் சற்றே ஆடிப் போனார்கள். வளைகுடா நாடுகளில் இருந்து உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹார்மூஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டிலே இருக்கிறது. இந்த நீரிணையை மூடுவதாக ஈரான் தடாலடியாக அறிவித்தது.

இதனால், உலகின் பெரும் பாலான நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தடை பட்டது. எல்பிஜி எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல், நாப்தா ஆயில், கனரக தொழிற்சாலைகளுக்கான எண்ணெய்கள் ஆகியவை தயாரிப்பதற்கான அடிப்படையே கச்சா எண்ணெய். அதன் விநியோகமே தடைபட்டதால் உலக நாடுகள் ஆடிப்போகியது.

பெட்ரோல் விலை உயர்வு:

இதன் விளைவு இன்று ஈரான் மீது இந்த போரைத் தொடங்கிய அமெரிக்காவிலே பெட்ரோல் விலை ஏறியுள்ளது. இந்த போருக்கு முன்பு ஒரு கேலன் பெட்ரோல் 2.89 டாலருக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 3.79 டாலருக்கு விற்கப்படுகிறது. அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா வில் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் என தகவல் காட்டுத்தீயாய் பரவியதால் எரிவாயு உருளையை வாங்குவதில் மக்கள் முண்டியடிக்கத் தொடங் கினர்.

பல நகரங்களில் வணிக எரி வாயு உருளைகள் கிடைக்காமல் உணவகங்களில் உணவுகளின் விலையையும், தேநீர் கடைகளில் தேநீர் விலையையும் வியாபாரிகள் உயர்த்தினர். பெட்ரோல் நிலை யங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவியும் நிலையும் உண்டானது. தற்போது சில பெட்ரோலிய நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட வகை பெட்ரோல்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் இந்த கதிதான் நடந்துள்ளது.

பறிபோன பல்லாயிரம் உயிர்கள்:

உயர்த்தப்பட்ட விலைகளை காட்டிலும் விலைமதிப்பில்லாத உயிர்கள் இந்த போரால் 5 ஆயிரத்திற்கும் மேல் பறிபோகியுள்ளது. இதில் அப்பாவி பிஞ்சு குழந்தைகளும் அடங்கும். ஈரானிலும், இஸ்ரேலிலும் கட்டிடங்கள் பெரியளவில் சேதம் அடைந்துள்ளன. இரு நாடுகளிலும் வசிக்கும் சாதாரண மக்கள் இந்த போரை கைவிட மன்றாடி வருகின்றனர். பஞ்சாயத்து செய்கிறோம் என்ற பெயரில் தலையிட்ட டிரம்ப் ஹார்மூஸ் நீரிணையை கைப்பற்ற கூடுதல் வீரர்களையும், கடற்படையையும் அனுப்ப வியூகம் வகுத்து வருகிறார்.

இந்த போருக்காக அமெ ரிக்கா இதுவரை 1.85 லட்சம் கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. அணு ஆயுதம் தயாரிக்க முயற்சித்ததால் தாக்குதலை தொடங்கினோம் என்ற அமெரிக்கா தொடங்கிய இந்த போருக்கு முன்வைத்த காரணத்தால், இன்று உலக நாடுகளில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த போரால் இஸ்ரேலுக்கும் 8 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு ஏற்பட்டுள்ளது. ஈரானும் பெரும் பொருளாதார சேதத்தை சந்தித்துள்ளது. உலக நாடுகளில் பங்குச்சந்தைகள் மிகப்பெரிய அளவில் ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. இந்த போருக்கு ஒரு நியாயமான காரணமே இல்லை என்று கூறி மனசாட்சி ஒப்புக்கொள்ளவில்லை என்றே கூறிவிட்டு அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு தடுப்பு மள்யத்தின் தேசிய இயக்குசர் ஜோ கென்ட் தனது பதவியையே விட்டு விலகியுள்ளார்.

எப்போது முடியும்?

இந்த போரை அமெரிக்கர்களில் பெரும்பாலோனோர் விரும்பாத நிலையில், டிரம்ப் தேவையில்லாமல் இந்த போரை நடத்தி உலக நாடுகளை மட்டுமின்றி தங்கள் நாடுகளையும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை. ரஷ்ய-உக்ரைன் போர், காசா – இஸ்ரேல் போர், இஸ்ரேல்? அமெரிக்கா – ஈரான் போர் என உலகின் ஒவ்வொரு மூலையிலும் நடக்கும் இந்த போர்களும், வெடிகுண்டு சத்தங்களும் நிரந்தரமாக முடிவுக்கு வந்து மக்கள் அமைதியாக வாழ உலகத் தலைவர்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதே பாதிக் கப்பட்ட ஒவ்வொரு மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *